குளித்தலை அருகே ஹோட்டல் கடைக்கு இலை வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குமாரசாமி மீது பால் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மணப்பாறை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தோகமலை பகுதியைச் சேர்ந்த குமாரசாமி வயது 45. இவர் அதே பகுதியில் ஹோட்டல் கடை நடத்தி வருகின்றார். காலை வழக்கம் போல் கடைக்கு தேவையான இலைகளை வாங்கிவிட்டு குளித்தலையில் இருந்து தோகைமலை செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாறையில் இருந்து குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த பால் வேன் எதிர்பாராத விதமாக குமாரசாமி இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு குமாரசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளித்தலை அருகே சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது
குளித்தலை அருகே சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள குளத்துக்கரையை பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் பூ விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் 17 வயதான சிறுமி ஒருவரை கடத்தி கோயம்புத்தூர் பகுதிக்கு சென்று விட்டதாகவும் தற்போது ஊருக்கு வருவதாகவும் அச்சிறுமி தனது தாயாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். பாக்யராஜ் மற்றும் அச்சிறுமி ஆகிய இருவரும் குளித்தலை வந்துள்ளனர். சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்த போது, கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்ததாகவும், தனது தோட்டத்திற்கு தன்னை வரச் செய்து பாக்கியராஜ் தனக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தனக்கு இரண்டு மாதமாக மாதவிலக்கு தள்ளிப்போனது என்றும் இது குறித்து பாக்கியராஜ் இடம் அச்சிறுமி கூறினார். தனது தோட்டத்திற்கு அச்சிறுமி அழைத்து கர்ப்பம் கண்டறியும் சிறு கருவி மூலம் சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது தான் கர்ப்பமானது தெரியவந்தது. இதை அறிந்த பாக்கியராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் எனவே நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்றும், கூறி கோயமுத்தூருக்கு அழைத்துச் சென்றார் அங்கு அவர்களது உறவினார் வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது அந்த உறவினர் பாக்யராஜின் தந்தைக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். இதை எடுத்து பாக்கியராஜ் இடம் பேசி அவர்கள் தந்தை சுப்பிரமணி வீட்டிற்கு வரவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு பாக்யராஜ் அச்சிறுமியை குளித்தலைக்கு அழைத்து வந்ததாக அச்சிறுமி தனது தந்தையிடம் நடந்த அவற்றை விளக்கி கூறியுள்ளார். இதை அடுத்து அச்சிறுமியின் தாயார் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திடம் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் போக்ஸோ சட்டத்தில் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் பாக்யராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.