கரூரில் முன்னாள் விசிக நிர்வாகி ராஜா குண்டர் சட்டத்தில் கைது

மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவின் படி விசிக முன்னாள் நிர்வாகி ராஜாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்.

Continues below advertisement

கரூரில் ஏற்கனவே சிறையில் உள்ள முன்னாள் விசிக நிர்வாகி ராஜா குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Continues below advertisement


கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சேகர் (41), டாரஸ் லாரி உரிமையாளர். இவரது, டாரஸ் லாரியை  டிரைவர் பழனிசாமி, கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், கடந்த 04.12.24 தேதி ஓட்டி சென்று கொண்டிருந்தார்.அப்போது, முன்னால் திருச்சி மண்டல விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளரான ராஜா (42) உள்ளிட்டோர் டூவீலரில் சென்று டாரஸ் லாரியை வழிமறித்து நிறுத்தினர். பிறகு, டாரஸ் உரிமையாளர் சேகரை வர வழைத்து, கட்சிக்கு நிதியாக, 30 ஆயிரம் ரூபாயை கேட்டுள்ளனர். ஆனால், டாரஸ் லாரி உரிமையாளர் சேகர் 4,000 ரூபாயை ஜி-பே மூலம் அனுப்பியுள்ளார்.இதனால், ஆத்திரம் அடைந்த ராஜா உள்ளிட்டவர்கள், டாரஸ் லாரி உரிமையாளர் சேகரை, தகாத வார்த்தை பேசி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, சேகர் அளித்த புகாரின்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளராக இருந்த ராஜாவை வெள்ளியணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


மேலும், இவர் குறித்து  தலைமைக்கு புகார் சென்றுள்ள நிலையில், ராஜாவை மூன்று மாத காலத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில், ராஜா மீது ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவின் படி இன்று விசிக முன்னால் நிர்வாகி ராஜாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.



 

Continues below advertisement
Sponsored Links by Taboola