தனது மூன்றாவது மனைவியை கொடூரமாக  கொலை செய்த நபரை போலீசார் 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளய்து.

22 ஆண்டுகளுக்கு முன்பு:

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டு தனது மூன்றாவது மனைவியைக் கொலை செய்து கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றம் சாட்டப்பட்ட ஹனுமந்தப்பா, தனது மனைவி ரேணுகாமாவைக் கொன்று, அவரது உடலை ஒரு பையில் அடைத்து பேருந்தில் விட்டுச் சென்றுள்ளார். கொலைக்கு பின்னர் தலைமறைவாக இருந்தார். இந்த கொடூரமான குற்றம் அந்த நேரத்தில் அந்தப் பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது, மேலும் கங்காவதி டவுன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைப்பெற்றது.

49 வயதில் கொலை:

குற்றம் நடந்தபோது 49 வயதான ஹுசேனப்பாவின் மகன் ஹனுமந்தாவுக்கு இப்போது 72 வயது. அவர் பதர்லி ஆரம்ப சுகாதார மையத்தில் இளநிலை சுகாதார உதவியாளராகப் பணிபுரிந்தார், மேலும் ராய்ச்சூர் மாவட்டத்தின் மான்வி தாலுகாவில் உள்ள ஹலதால் கிராமத்தில் வசிப்பவர்.

விரிவான தேடுதல் மற்றும் விசாரணைகள் இருந்தபோதிலும், ஹனுமந்தப்பா கைது செய்யப்படுவதைத் தவிர்க்க முடிந்தது. 23 ஆண்டுகளாக, அவர் எந்த தெளிவான தடயத்தையும் விட்டுச் செல்லாமல் இருந்தார். அதனால் கொலையாளியை பிடிக்க எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசார் தடுமாறி வந்தனர்

சொந்த கிராமத்தில் வைத்து கைது:

சில நாட்களுக்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் ராய்ச்சூர் மாவட்டத்தின் மான்வி தாலுகாவில் உள்ள தனது சொந்த கிராமமான ஹலதாலுக்குத் திரும்பி வந்ததாக போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அவரை அங்கேயே கைது செய்தனர்.

ஹனுமந்தப்பா தனது சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு முன்பு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு அவருக்கு உள்ளூர் ஆதரவு ஏதேனும் இருந்ததா என்று போலீசார் இப்போது விசாரித்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது, குற்றம் சாட்டப்பட்டவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.