வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என தனது கடைசி நிமிட பதிவை பதிவிட்டு நிலையில் நண்பரை தேடி அலைந்த நண்பர்களுக்கு தீயில் கருகிய நிலையில் இருந்த உடலை கண்டு அதிர்ச்சி
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் சேர்ந்தவர் காஞ்சி அப்பு (எ) அருண். இவர் பம்பை கைச்சலம்பு கலைஞர். இவர் காஞ்சி ஸ்ரீ நாககன்னி பம்பை கை சிலம்பக் குழுவை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மன அழுத்தம்
இந்தநிலையில் வீட்டில் நேற்று மாலை வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் அப்பு (எ) அருணின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் எனது கடைசி புகைப்படம் என பகிர்ந்துள்ளார். மேலும் புகைப்படம் பதிவு செய்து ஒன்றையும், நான் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து இன்றைக்கு இந்த நிலையை தெரிவித்திருந்தார். வாழ்க்கையில் எனக்கு கஷ்டம் மட்டுமே என்னை தொடர்ந்து வருவதாக கூறி நான் யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன். யாருக்கும் கஷ்டமாக இருக்க மாட்டேன் தான் சந்தோஷபட்டது எதுவும் நிலைத்தது இல்லை எனவும் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
இதனை கண்ட நண்பர்கள், கைசிலம்பம் குழு நண்பர்களும் அருணை தேடி அலைந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்று படுகையில் காஞ்சி அப்பு என்கின்ற அருணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவலானது கொடுக்கப்பட்டிருக்கிறது. இது நடத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் பாலாற்று படுகையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ளே தீயில் கருகிய நிலையில் இருந்த அருணின் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அருகாமையில் மது அருந்தியதற்கான அடையாளங்களும், அருணின் சடலத்தின் அருகே 2 வாட்டர் பாட்டில் கேன்களில் பெட்ரோல் இருந்ததையும், கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருண் மது அருந்தியதற்கான அடையாளங்கள் உள்ள நிலையில் யாருடன் மது அருந்தினார், அவர் இங்குதான் இருப்பார் என எப்படி தெரிந்தது என்கிற கேள்விகளோடு இது தற்கொலையா என தாலுகா போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 24640060)