பி.பி.ஜி.டி.சங்கர்

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் பி.பி.ஜி.டி சங்கர்.  சங்கர் மீது ஸ்ரீபெரும்புதூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் 2004–ம் ஆண்டுக்கு முன்பு வரை, அப்பொழுது பிரபல ரவுடியாக இவருடைய  அண்ணன் பி.பி.ஜி.குமரனுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்தார். அப்பொழுது ரவுடியாக குமாரன் செய்த அனைத்து சமூகவிரோத செயல்களிலும் பங்கு பெற்றார் என கருதப்படுகிறது .

 


 பி.பி.ஜி.டி சங்கர் மீது 15 வழக்குகள் பதியப்பட்டுள்ள , மூன்று குற்றப்பத்திரிகையும் தமிழக காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 6 நபர்களை காஞ்சிபுரம் காவல்துறையினர் செய்துள்ளனர்.

 

 

ஸ்கெட்ச் போட்ட குட்டி தாதாக்கள்

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று. இரவில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து பணிகள் நடைபெற்று. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே, மரங்கள் நிறைந்த தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 4, 5 பேர் நின்று இருந்ததை, ரோந்து பணியில் சென்ற காவலர்கள் பார்த்து உள்ளனர்.


 

உடனடியாக சம்பவ இடத்தில் விரைந்து சோதனை செய்ததில் வளர்புரம் பகுதியைச் சேர்ந்த விஜய் ( 27 ), என்ற நபர் கைது செய்தனர். கைதான விஜய் கொடுத்த தகவலின் அடிப்படையில் வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் ஷங்கரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதற்காக வெடிகுண்டு வீசுவதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். வெடிகுண்டு வீசுவதற்காக குன்றத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் குற்றவாளி ஒருவர் இவர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

வெடிகுண்டு பயிற்சி எடுத்தவர்கள் கைது..

 

 

இதனை அடுத்து காவல்துறையினர் சில நாட்களுக்கு முன் ஸ்ரீபெரும்புதூர் வளர்புறம் பகுதியை சேர்ந்த  கைப்புள்ள ( எ ) ஞானபிரசாத் ( 21 ),   சுரேஷ் ( எ ) குயிக் சுரேஷ்  ( 25 ), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ்   ( 24 )  ,  அன்பு ( எ ) அன்பரசன் (25) , டேவிட் ( எ ) டேவிட்சன் ( 25 ), ஆகிய 6 நபர்களை கைது செய்யப்பட்டனர். இதில் அன்பு மற்றும் ஞானபிரசாந்த் பெங்களூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 


 

மேலும் விசாரணையில் கைப்புள்ள ( எ ) ஞானபிரசாத், நாகராஜ் மற்றும் சுரேஷ் ( எ ) குயிக் சுரேஷ் ஆகியோர் மீது ஏற்கனவே, திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் ஆயுத தடை சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அதேபோல கைது செய்யப்பட்டுள்ள அன்பு மீது ஏற்கனவே ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

 

 

 

டெக்னாலஜி...

 

 

 ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அதிகம் இயங்கி, அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தொழிற்சாலை அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. காஞ்சிபுரத்தில் முக்கிய ரவுடிகளாக இருந்த படப்பை குணா மற்றும் தியாகு உள்ளிட்ட ரவுடிகள் சிறையில் இருந்து வரும் நிலையில், குட்டி தாதாக்கள் தொழிலதிபர்கள் செய்ய திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்கும் இவர்கள், கல்லூரி மாணவர்கள் மூலம் தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக்கொண்டு, இன்டர்நெட் காலிங் மூலம் தொடர்பில் இருந்து கொண்டே திட்டம் தீட்டியதாகவும், தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 


எனக்கே ஸ்கெட்ச் போடுறீங்களா..

 

 

இதனிடையே ஞானபிரசாத், விஜய் கூட்டாளியான வளர்புரம் பகுதியை சேர்ந்த ராஜ்கிரனை சங்கர் அழைத்து, சங்கர் எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள், என்னையே கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளீர்களா, உங்களுக்கெல்லாம் அவ்வளவு தைரியம் வந்து விட்டதா, உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் ராஜ்கிரன் புகார் அளித்தார். புகாரின்படி காவல்துறையினர் சங்கர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பி.பி.ஜி.டி சங்கரை  தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்