காஞ்சிபுரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சென்னை தாம்பரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்
தாம்பரம் அருகே தள்ளு வண்டி கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்த காஞ்சிபுரம் காங்கிரஸ் தலைவர் மீது கட்டுபாட்டை இழந்த அமரர் ஊர்தி வாகனம் மோதி உயிரிழப்பு கொலை நோக்கத்துடன் விபத்து ஏற்படுத்தபட்டதா என்ற கோணத்தில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், வாலாஜபாஜ் ஒன்றி கவுன்சிலருமான அளாவூர் நாகராஜ்(57) நேற்று நள்ளிரவு சென்னையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தனது ஆதரவாளர்களுடன் இரண்டு கார்களில் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தள்ளு வண்டி கடையில் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு சென்றுள்ளனர். இதில் நாகராஜ் சைவம் என்பதால் அருகில் இருந்த தள்ளு வண்டியில் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்தார்,
அப்போது அதே கடையில் சாப்பிட்டுவிட்டு அமரர் ஊர்த்தி ஓட்டுனர் தனது நண்பர்களுடன் வாகனத்தின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் கட்டுபாட்டை இழந்த வாகனம் சாப்பிட்டு கொண்டிருந்த நாகராஜ் மீது வேகமாக மோதியது இதில் தூக்கிவீசபட்டவர் பலத்த காயமடைந்தார். விபத்தை எற்படுத்திய ஓட்டுனர் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றனர்.
இதனை கண்ட உடன் வந்த ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு நாகராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பள்ளிகரனை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலை நோக்கத்துடன் விபத்தை ஏற்படுத்தினார்களா என்ற கோணத்தில் தப்பி சென்ற நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதன் காரணமாக தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.