பெண் மருத்துவர் உட்பட பல பெண்களை காதலிப்பது போல் நடித்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் குற்றவாளிகள் காசி மற்றும் ஜினே கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களின் கூட்டாளி கௌதம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெண் மருத்துவர் அளித்த புகாரில் நாகர்கோவில் காசி மற்றும் ஜினே ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் குவைத்திலிருந்த குற்றவாளி கௌதமிற்கு சிபிசிஐடி போலீசார் லுக் - அவுட் நோட்டீஸ் விட்டிருந்த நிலையில், கௌதம் இன்று தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்திற்கு வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து கௌதமை கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவரை நாகர்கோவில் சிபிசிஐடி போலீசார் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.