குழந்தைகள் பாதுகாப்பு உதவி இலவச அழைப்பு எண்ணான 1098க்கு ஒரு செல்போன் அழைப்பு நேற்று முன்தினம் வந்தது. அதில் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த ஒரு விவசாயி பேசியுள்ளார். அவர் எனது மகள் மல்லூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். எனது மகளுக்கு சென்னையை சேர்ந்த வாலிபர்களுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர்கள் உல்லாசத்திற்கு வரவேண்டும் இல்லை என்றால் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என்று பேசி மிரட்டுகின்றனர் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர். 

Continues below advertisement


இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் அந்த மாணவி தங்கியிருந்த உறவினர் வீட்டுக்கு சென்றபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த கிஷோர்(22), முகமது அலி(22) என்பது தெரியவந்தது. கிஷோர் லேப்டெக்னீசியனாகவும், முகமதுஅலி மெக்கானிக்காகவும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் இருவரும் மாணவியை மிரட்டியதை ஒப்புக்கொண்டனர். 


இதையடுத்து அந்த இரண்டு வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக போலீசாரிடம் கிஷோர் அளித்த பரபரப்பு வாக்குமூலம், "இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் மாணவியுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் நான் காதலிப்பதாக கூறி, அந்த மாணவியிடம் உருக உருக பேசினேன். ஒரு கட்டத்தில் மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக இருக்க கூறினேன். அதற்கு மாணவி மறுத்தார். அப்போது நாம் இரண்டு பேரும் காதலர்கள் தானே, நான் தானே உன்னை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று ஆசையை வார்த்தைகளை கூறினேன். இதனை நம்பி மாணவி வீடியோ காலில் முழு நிர்வாண கோலத்தில் நின்றார். இதை நான் வீடியோ எடுத்து எனது செல்போனில் பதிவு செய்து கொண்டேன். பின்னர் நான் மாணவியிடம் செல்போனில் தொடர்புகொண்டு நானும், எனது நண்பர் முகமது அலியும் சேலம் வந்துள்ளோம். எங்களிடம் உல்லாசத்திற்கு வரவில்லை என்றால் நிர்வாணமாக எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டினேன்.


மேலும் மாணவியை அழைத்து செல்ல உறவினர்கள் வீட்டில் அருகே நாங்கள் சுற்றி வந்தபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம் என்று வாக்குமூலம் கூறியுள்ளார். கிஷோர், முகமது அலி செல்போன்களை பறிமுதல் செய்ததுடன் இதேபோன்று அவர்கள் வேறு யாரையாவது மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து உள்ளார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.