செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் செமஸ்டர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.


தேர்வு கண்காணிப்பாளரிடம் கையும் களவுமாக


செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தக் கல்லூரியில் பயிலும் கோகுல் ராம் என்பவர் வழக்கம்போல் தேர்வு எழுதியுள்ளார். அப்போது கோகுல் ராம் தேர்வில் பிட்டு அடித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளார். இந்தநிலையில் செமஸ்டர் தேர்வில் காப்பியடித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் கையும் களவுமாக சிக்கியதால், அவமானம் அடைந்த கோபுரம் கோகுல் ராம் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


கைப்பற்றி பிரேத பரிசோதனை


இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்த அங்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடல்நிலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீசார்  வழக்கு பதிவு


மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றதால் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவனின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல கல்லூரியில் இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Suicidal Trigger Warning


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)