மேலும் அறிய

படிப்புக்கு வேலை இல்லா இளைஞர்கள்: 23 கோடி கஞ்சா கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

"தாய்லாந்து நாட்டிலிருந்து, விமானங்களில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.23 கோடி மதிப்புடைய, ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது"

தாய்லாந்து நாட்டிலிருந்து பெருமளவு உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா விமானங்களில், சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்படுவதாகவும், அந்த கடத்தலில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஈடுபட்டு இருப்பதாகவும், சென்னை விமான நிலைய சுங்க துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், தனிப்படை அமைத்து, சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

இளைஞர்கள் மீது சந்தேகம்

இந்தநிலையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள், ஒரு குழுவாக தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக சென்று, அடுத்த நாளே, தாய்லாந்தில் இருந்து இந்த விமானத்தில், சென்னைக்கு திரும்பி வந்துள்ளனர். 

அந்த கேரள இளைஞர்கள் மீது, ஏர் இன்டெலிஜெண்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர் விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதை அடுத்து அவர்கள் 4 பேரையும், சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவர்கள் உடமைகளை பரிசோதித்தனர். அப்போது அவர்கள் உடமைகளுக்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகள், மற்றும் சாக்லேட் பாக்கெட் இருந்ததை கண்டுபிடித்தனர்.

உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா

அவைகளை திறந்து பார்த்து சோதித்த போது, மொத்தம் 15 கிலோ எடையுடைய உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 15 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் 4 பேரையும் கைது செய்து, ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, மற்றொரு பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்த போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள், சுற்றுலா பயணிகளாக தாய்லாந்து நாட்டிற்கு, கேரளாவில் இருந்து சென்று விட்டு, மறுநாளே அங்கிருந்து மற்றொரு விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்துள்ளது தெரிய வந்தது. 

இரண்டு பேரையும், சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று உடைமைகளை சோதித்தனர். அவர்கள் உடைமைகளில் பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட் இருந்தன. அவைகளை திறந்து பார்த்த போது, உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் உடமைகளில் 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை, சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 8 கோடி. இதை அடுத்து 2 பேரையும் கைது செய்த சுங்க அதிகாரிகள், ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

23 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.23 கோடி மதிப்புடைய, 23 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு,6 கேரள மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும், சர்வதேச போதை கடத்தும் கும்பலுக்கு, கடத்தல் குருவிகளாக செயல்படுகின்றனர் என்று தெரிய வந்தது. மேலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆன இவர்கள்,6 பேரும், பட்டதாரிகள். இவர்களில் சிலர் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் படிப்பும் படித்தவர்கள்.

இவர்கள் படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததாலும், சாதாரண வேலைகள் பார்த்தால், குறைந்த அளவு வருமானமே கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு, ஆடம்பரமாக, வசதியாக வாழ்க்கை நடத்த முடியாது என்பதால், குறுக்கு வழியில், அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இதைப்போல் கடத்தல் குருவிகளாக செயல்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதோடு இந்த 6 கடத்தல் குருவிகளில், ஓரிருவர் தவிர மற்றவர்கள், கடத்தல் தொழிலுக்கு புது முகங்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
Iran Earthquake: அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
மீண்டும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; எங்கே? ஏன்? மாணவர்கள் வேதனை!
மீண்டும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; எங்கே? ஏன்? மாணவர்கள் வேதனை!
Israel Iran War US Order: ஏதோ பெரிசா நடக்கப் போகுது.! அலறும் அமெரிக்கா; 14 நாடுகளில் இருந்து தங்கள் மக்கள் வெளியேற உத்தரவு
ஏதோ பெரிசா நடக்கப் போகுது.! அலறும் அமெரிக்கா; 14 நாடுகளில் இருந்து தங்கள் மக்கள் வெளியேற உத்தரவு
iPhone 17e Review: இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
Mahindra Scorpio N on EMI: நீங்க ரூ.50,000-க்கு மேல சம்பாதிக்குறீங்களா.? அப்போ கம்பீரமான ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; EMI பிளான் இதோ
நீங்க ரூ.50,000-க்கு மேல சம்பாதிக்குறீங்களா.? அப்போ கம்பீரமான ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; EMI பிளான் இதோ
CM Surprise Gift: மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
Embed widget