ஹைதராபாத்தில் தையல் தொழிலாளியான கணவர் தனது விருப்பப்படி ஜாக்கெட் தைக்காததால் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அம்பெர்பெட் பகுதியில் உள்ள கோல்நாகா திருமலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். தையல் தொழில் செய்து வருகிறார். முப்பத்தைந்து வயதான விஜயலட்சுமி, தனது கணவர் தனக்கு தைத்த ஜாக்கெட் தொடர்பாக தகராறு செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீநிவாஸ் வீடு வீடாகச் சென்று புடவைகள் மற்றும் ஜாக்கெட்ப் பொருட்களை விற்றும், வீடுகளில் துணிகளைத் தையல் செய்தும் வாழ்வாதாரம் செய்து வருகிறார். அவர் நேற்று விஜயலட்சுமிக்கு ஜாக்கெட் தைத்து கொடுத்ததாகவும், ஆனால் அவர் அதை விரும்பவில்லை என்றும், இது தொடர்பாக தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி தனக்கு இந்த ஜாக்கெட் பிடிக்கவில்லை என்றும் வேறு ஒரு ஜாக்கெட் தைத்து தரும்படியும் கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு ஸ்ரீநிவாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. சண்டை பெரிதானபோது ஜாக்கெட்டின் தையல்களை பிரித்து விஜயலட்சுமியிடம் கொடுத்து நீயே உன் விருப்பப்படி தைத்துக்கொள் என்று கூறியிருக்கிறார். அதனால் விஜயலட்சுமி மேலும் மனம் வருந்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீநிவாஸ் வீட்டைவிட்டு வெளியேற சென்றுள்ளார். பின்னர் சில மணி நேரம் கழித்து பள்ளிக்குச் சென்றிருந்த குழந்தைகள் வீடு திரும்பிய பின் வீட்டில் யாரும் இல்லாததால், தாயைத் தேடி படுக்கையறை கதவை தட்டியுள்ளனர். வெகுநேரமாகியும் கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர். இதுப்பற்றி அக்கம்பக்கத்தினரால் ஸ்ரீநிவாஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டிற்கு விரைந்த ஸ்ரீநிவாஸ், அவர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவர் தட்டியும் அழைத்தும் கதவு திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயலட்சுமி இறந்து கிடந்தது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விஜயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவர் ஸ்ரீனிவசை விசாரணைக்கு உட்படுத்திய அம்பர்பேட்டை இன்ஸ்பெக்டர் பி.சுதாகர் கூறுகையில், கடந்த காலங்களில் கூட தனது மனைவி மனமுடைந்தபோது ரூமிற்குள் சென்று பூட்டிக் கொண்டதாகவும், அதனால் அவர் இம்முறையும் சந்தேகம் கொள்ளாமல், அவரை ஆசுவாசம் அடைவதற்காக தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றதாகவும் கணவர் கூறியதாக தெரிவித்தார். 36 வயதுடைய பெண் தற்கொலைக் கடிதம் எதுவும் எழுதாத காரணத்தால் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தான் விரும்பியபடி கணவர் ஸ்ரீநிவாஸ் ஜாக்கெட் தைத்து தராததால், மனமுடைந்து விஜயலட்சுமி தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050