தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் இளம்பெண் ஒருவரை முன்னாள் கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன் இந்த கொலை நடந்தது என்பது பற்றிப் பார்க்கலாம். 

Continues below advertisement

குற்றம் சாட்டப்பட்ட நபரும், கொலை செய்யப்பட்ட ஐடியில் பணியாற்றும்  அந்த பெண்ணும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக இவர்களின் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் அந்த நபர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கனடாவுக்கு சென்றார். இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை தொடங்கலாம் என நினைக்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியது. இதனால் அந்த பெண் இந்த பிரச்னையை சரி செய்ய இந்தியாவுக்கு திரும்பினர். 

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படாத நிலையில் மகாராஷ்ட்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். இவர்களுக்கு 2024ம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. அதன்பின் அந்த பெண் 2025ம் ஆண்டு மறுமணம் செய்துக் கொண்டார். இதற்கிடையில்2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த நபரின் தாயார் உயிரிழந்தார். இதற்காக அவர் கனடாவில் இருந்து இந்தியா திரும்பினார்.

Continues below advertisement

ஆனால் விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அந்த நபருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் வெளிநாடு செல்வதில் சிக்கல் எழுந்தது. அவரால் கனடா திரும்ப முடியாமல் போனதால் வேலையும் பறிபோனது. இதன் காரணமாக தெலுங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் அந்த நபர் வசித்து வந்தார். 

இதற்கிடையில் தன்னுடைய வேலை பறிபோனதற்கும், கனடா போக முடியாமல் சென்ற காரணத்திற்கும், தன் தாயார் மன உளைச்சலால் உயிரிழந்ததற்கும் அந்த பெண் தான் காரணம் என இந்த நபர் நம்பினார். இதனால் கடும் கோபம் கொண்ட அவர் தனது முன்னாள் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். அவரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பின் தொடர்ந்து வீட்டு முகவரியை கண்டுபிடித்தார்.  இரண்டு மாதங்களுக்கு முன் ஹைதராபாத் வந்த அந்த நபர் அங்கிருந்த மேன்ஷன் ஒன்றில் தங்கியிருந்தார். இந்த நேரத்தில் அந்த பெண் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதை அறிந்த நபர் நேராக திட்டமிட்டபடி அங்கு சென்றார்.

இரண்டு கத்திகள், ஒரு துளையிடும் இயந்திரம் மற்றும் ஐந்து லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு கேனுடன் சென்ற  அந்த நபர் அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அவரை ஒரு அறைக்குள் அடைத்து தள்ளி கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அப்பெண் அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நடைபெற்றபோது அந்த பெண்ணின் மாமியார் பால்கனியில் இருந்தார். மருமகள் அலறல் சத்தம் கேட்டு வந்த அவர் அறைக்கதவை தட்டிய நிலையில் அந்த நபர் திறக்கவில்லை. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் அந்த நபர் அந்த அறை முழுவதும் பெட்ரோல் ஊற்றி பாத்ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். கதவை உடைத்து வந்தால் தீ பற்ற வைப்பேன் என மிரட்டினார்.ஒருவழியாக போலீசார் அந்த அறைக்கதவை உடைத்து அந்த நபரை கைது செய்தனர்.