Crime: ஹைதராபாத்தில் 4 வயது சிறுமியை பள்ளி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத் மாநிலம் பஞ்சாரா மலைப்பகுதியில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமி ஒருவர் படித்து வந்தார். அதே பள்ளியில் முதல்வரின் ஓட்டுநரான ரஜினிகுமார் என்பவர் பள்ளியில் ஆய்வகங்களை பராமரித்தல், பள்ளி அலுவலக வேலையில் போன்றவற்றையில் ஈடுபட்டு வந்திருந்தார். இந்நிலையில் அந்த பள்ளியில் இருக்கும் 4 வயது சிறுமியிடம் அன்பாக பழகுவதுபோல நடித்துவந்தார். அப்போது அந்த சிறுமியுடன் பள்ளியில் நெருக்கமாக பழகி, அந்த சிறுமியை கடந்த இரண்டு மாதங்களாக பள்ளியிலேயே பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார். கடந்த இரண்டு மாத காலமாக தினமும் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் குழந்தை மிகவும் களைப்புடனும், வலியுடனும் சென்று கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமியை வழக்கமாக செய்யும் வேலைகளில் ஒரு ஈடுபாடு இல்லாமல் இருந்தார். சக சிறுமிகளிடம் விளையாடுதல், படித்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் கடந்த இரண்டு மாதமாக இருந்து வந்தார் என கூறப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை அன்று சிறுமியிடம், பெற்றோர் நடத்தையின் மாற்றம் குறித்து கேட்டனர். அதற்கு அந்த சிறுமி மனம் திறந்து எல்லாவற்றையும் தனது பெற்றோருக்கு தெரிவித்தார். பின்பு பாதிக்கப்பட்ட சிறுமி மறுநாள் அதாவது நேற்று பெற்றோருடன் பள்ளிக்கு சென்றார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபரை, சிறுமி தன் தாயிடம் சுட்டிக்காட்டினர் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பஞ்சாரா காவல்துறையில் புகார் ஒன்று அளித்தார். புகாரை அடுத்த அந்த பள்ளியில் பணியாற்றிய ஓட்டுநர் ரஜினிகுமாரை அதே பள்ளியில் பஞ்சாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை பெற்றோர் கவனித்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வந்த அந்த சிறுமிக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த ஆலோசனையில் அந்த சிறுமிக்கு என்ன நடந்தது என்பது கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அந்த சிறுமி தனக்கு நடந்த அனைத்தையும் வெளிப்படையாக தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஓட்டுநர் ரஜினிகுமாரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக மற்ற பெற்றோர்களும் ரஜினிகுமார் மீது பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரஜினிகுமார், மற்ற மாணவர்களிடமும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரை என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.