மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்கின்ற பாண்டி. இவர் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 19 வயதில் அபர்ணா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற நிலையில் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவோடு, நீட் தேர்வு எழுதிவிட்டு மருத்து படிப்பில் சேர்வதற்காக காத்திருந்தார். இந்த நிலையில் இவர் விராட்டிபத்து பகுதியில் பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற வாலிபர் அபர்ணாவை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

Continues below advertisement


 



இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபர்ணாவின் வீட்டுக்கே வந்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அவருடைய தந்தை அதற்கு மறுத்துள்ளார். இதனால் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று  மதியம் வீட்டிற்கு வந்த ஹரிஹரன் தனியாக இருந்த அபர்ணாவை திருமணம் செய்ய வரும்படி கட்டாயப்படுத்தியபோது, அபர்ணா வர மறுத்ததால் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து அபர்ணா கழுத்து கை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார்.










 

அபர்ணாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்கும் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு தலை காதலுக்காக இளம் பெண் மதுரையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண