கும்மிடிப்பூண்டியில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டிங் மெஷின் உதவியோடு உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவை கருப்பு பெயிண்டால் மறைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.அருகில் உள்ள மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது.

Continues below advertisement

கடந்த 3 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதே பாணியில் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் உடைக்கப்பட்டதாக அருகில் உள்ள கடைக்காரர் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.அதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்ததில் ஏடிஎம் இயந்திரம் கேஸ் கட்டிங் மெஷின் கொண்டு உடைக்கப்பட்டதும், அந்த அறையில் இருந்த சிசிடிவி கேமரா கருப்பு பெயிண்ட் அடித்து மறைக்கப்பட்டதும் தெரிய வந்தது.

Continues below advertisement

இதனையடுத்து வங்கி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பிறகு அங்கு வந்து விசாரணை நடத்தியதில் ஏடிஎம்மில் வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அருகில் இருந்த மற்றொரு ஏடிஎம் இயந்திரமும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

கொள்ளை அடித்தவர்கள் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த 3 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் உடைக்கப்பட்டு ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.காஞ்சிபுரம் போலீசார் தனிப்படை அமைத்து அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதே பாணியில் கேஸ் வெல்டிங் வைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளதால் வடமாநில கொள்ளையர்களின் கைவரிசை இருக்கலாம் என கருதும் கும்மிடிப்பூண்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.