காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர்கள் ரஜினி - லதா தம்பதியினர். ரஜினி அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 2 வது மகள் கனிஷ்கா. காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வழியில் 11ம் வகுப்பு வாரலாறு பாட பிரிவில் படித்து வருகிறார். இந்நிலையில் கனிஷ்கா ஆங்கில பாடத்தை சற்று குறைவாக உள்வாங்கிக் கொள்வதாக ,  வகுப்பில் ஆசிரியை திட்டியதாக தெரிகிறது. மேலும் பெற்றோரை அழைத்து வரும் படி கூறி உள்ளார்.




தூக்கிட்டு தற்கொலை


இதனால் கனிஷ்கா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கனிஷ்கா வீட்டில் யாரும் இல்லாததால், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணி முடிந்து வீட்டுக்கு வந்த தாய் அறை கதவை திறந்து பார்த்த போது, மாணவி கனிஷ்கா தூக்கிட்டு கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். கனிஷ்காவின் தாய் கதறி அழுகின்ற சத்தத்தை கேட்ட, அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு கனிஷ்காவை,  மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மருத்துவ மனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்தது விட்டார் என தெரிவித்தனர். இதனை அடுத்து மாணவியின் உடல், உடற்கூராய்வுக்காக  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.




இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது , தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி உயிரிழந்ததால், பெற்றோரும், சகோதரிகளும் கண்ணீர் விட்டு கதறிய காட்சி காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது. பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் புத்தேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




டைரி ஒன்றில்...


இதனை அடுத்து காவல்துறையினர் மனைவியின் உடமைகளை சோதித்து பார்த்தனர். அப்பொழுது டைரி ஒன்றில் மாணவி தற்கொலை கடிதம் எழுதி வைத்தது தெரியவந்தது, " அந்த கடிதத்தில் , என்னுடைய மிஸ் திட்டிட்டாங்க, நாளைக்கு அப்பாவ வேற கூட்டிட்டு வரச் சொல்றாங்க,  என்ன இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல படிக்க வைச்சுருந்தா நான் அசிங்கப்பட்டு இருக்க மாட்டேன். பிட் அடிச்சவங்க எல்லாம் நல்லா மார்க் எடுக்குறாங்க ஆனா என்னால முடியல,  AM Not Happy அம்மா  , அக்கா தங்கச்சி எல்லாம் நல்லா படிக்கிறாங்க என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடிதத்தையும் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)