புதுச்சேரி: ஜெர்மனியில் வேலை வாய்ப்பு உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ. 2.24 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது, இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

ஜெர்மனியில் வேலை - ரூ.2.24 லட்சத்தை மோசடி செய்த கும்பல் 

புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். இதையடுத்து, அதிலிருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய நபர் ஜெர்மனியில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வேலைக்கு விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதைநம்பி, மர்ம நபருக்கு ரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் அனுப்பினார்.

அதன்பின் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதேபோல், மணவெளியை சேர்ந்தவர் 19 ஆயிரத்து 700, உருளையன்பேட்டையை சேர்ந்த பெண் 35 ஆயிரத்து 256, லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 25 ஆயிரம் என, 4 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 956 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை,

ஆன்லைனில் வரும் விளம்பரத்தை நம்பி யாரும் மொபைல் ஆப்களில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம். பெரும்பாலும் இது போன்ற மோசடி ஆப்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இதுபோன்ற பல்வேறு ஆப்களில் மக்கள் முதலீடு செய்து பல கோடி ரூபாய் இழந்து வருவது தெரிவித்தும், அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு மக்கள் மீண்டும் மீண்டும் பணத்தை முதலீடு செய்து இழந்து வருவது தொடர்கதையாக உள்ளது. ஆகவே, மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைன் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

வங்கி OTP எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது