கரூர் மாவட்டம், புகழூர் பகுதியில் தனியார் (ஈ.ஐ.டி. பாரி) சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200 மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


 




 


இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், விடுமுறை முடிந்த பிறகு அனைவரும் சர்க்கரை ஆலைக்கு வேலைக்கு வந்துள்ளனர்.  பல நாட்களாக சர்க்கரை ஆலை இயங்காமல், இயந்திரம் செயல்படாத இருந்த நிலையில் இயந்திரத்தின் உள்ளே கரும்பு சக்கைகள், கரும்பு சார் இருந்துள்ளது.


 




 


 



அதை அப்புறப்படுத்த ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் முசிறியைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 27), சேலத்தைச் சேர்ந்த சதீஷ் (25) ஆகியோர் முயற்சித்தனர். பத்து தினங்களாக தேங்கியிருந்த நிலையில் திடீரென ஆவி போல் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால்  இரண்டு நபர்களும் மயக்கமடைந்துள்ளனர். அப்போது அந்த இடத்திகு  வந்த ஆலை பிராசசிங் அதிகாரி அவர்களை மீட்க முற்ப்பட்டனர். அப்போது அவரையும் விஷவாயு தாக்கியதில் மூன்று நபர்களும் மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக மூவரையும் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


 




ஆலையின் அபாய சங்கு தொடர்ந்து மூன்று முறை ஒழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் ஒன்று கூடும்படி அதிகாரிகள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உரிய நேரத்தில் வாயு கசிவு சரி செய்யப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.




 குடும்ப தகராறு விவசாயி தற்கொலை.


தென்னிலை அருகே, குடும்பத்தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம், தென்னிலை, கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த, பழனிச்சாமி மகன் கார்த்திக் விவசாயி. இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த, குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து கார்த்திக், ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்தி உயிரிழந்தார். இது குறித்து கார்த்திக்கின் சகோதரர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.




மது, கள் விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது .


கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது,கள் விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் ,மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சட்டம் ஒழுங்கு போலீசார் வாங்கல், குளித்தலை, பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில் கல் விற்பனை செய்ததாக பெரியசாமி, முத்து, செந்தில்குமார், ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 16 மது பாட்டில்கள் 10 லிட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.




கரூர் அருகே ரேஷன் அரிசி பறிமுதல் இரண்டு பேர் கைது.


கரூர் அருகே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். கரூர் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் எஸ்ஐ கணேசன் உள்ளிட்ட போலீசார் லாலாபேட்டை, பள்ளாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலையாளி கோவில் அருகே 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜன், முருகானந்தம், ஆகிய இருவரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.