பங்கு சந்தை மோசடி: திருமண மண்டபத்தில் வெடித்த கோபம்! கோடிகளை இழந்தவர்கள் மாப்பிள்ளையை தாக்கிய அதிர்ச்சி சம்பவம்!
பல்லாவரம் அருகே பங்கு சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பல கோடி சுருட்டிய இளைஞர் மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது"

"திருமணம் நடைபெறுவதை அறிந்த நிலையில்,பணத்தை இழந்தவர்கள் கொந்தளித்து திருமண மண்டபத்திற்கு சென்று மாப்பிள்ளையை வெளுத்து வாங்கியதால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது"
ஆன்லைன் வர்த்தகம்
சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கிளிண்டன். இவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் சகலகலா வல்லவன் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முன்னணி யூடியூப்பில் சேனல்களில் பங்கு சந்தையில், பணத்தை செலுத்தி எவ்வாறு லாபத்தை ஈட்டலாம் என இன்டர்வியூ கொடுத்த வீடியோ வைரலாகி உள்ளார்.
இந்தநிலையில் பல்லாவரம் பகுதியில் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமிருந்து கோடி கணக்கில் பணத்தை வாங்கி பங்கு சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பங்கு சந்தை வர்த்தகத்தை கற்றுக் கொடுப்தாக கூறி பலரிடம் அறிமுகம் ஆனதுடன் அவர்களிடமே, ஆசை வார்த்தைகள் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இலட்சக்கணக்கில் முதலீடு
இந்தநிலையில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவருடன் கிளிண்டனுக்கு அறகமுகமான நிலையில் அவருக்கும் ,பங்கு சந்தை வர்த்தகத்தை கற்றுக் கொடுத்துள்ளார். மேலும், அவரிடம் ஆசை வார்த்தைக்கு கூறி, 75 லட்சத்தை வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்து அதனை பல மடங்கு லாபம் ஈட்டி தருவதாக கூறி, பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கொடுத்த 75 லட்சம் பணமும், அதற்கு லாபமும் வராத நிலையில் தான் கொடுத்த அசலை மட்டுமாவது தந்து விடுங்கள் என மோகனப்பிரியா கேட்டபோது 75 லட்சமும் வர்த்தகத்தில் இழந்துவிட்டதாக கைவிரித்து உள்ளார்.
அப்பொழுது கிளின்டன் விட்ட பணத்தை மீண்டும் எடுக்க வேண்டும் மேலும் லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்டு மோகனப்பிரியாவுடன் தொந்தரவு செய்துள்ளார். இந்தநிலையில் மோகனப்பிரியா தனது ஆடி காரை விற்று 12 லட்ச ரூபாயை மீண்டும் கொடுத்த நிலையில் அதுவும் முதலீட்டில் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
ஒரு கட்டத்தில் மோகனப்பிரியாவின் வீட்டில் பத்திரத்தை அடமானம் வைத்து, 40 லட்சம் ரூபாயை வாங்கிய கிளிண்டன் அதையும் ஏமாற்றி உள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாந்தத்தை அணிந்த மோகனப்பிரியா பல்லாவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார் இவரை போன்று ஏராளமானவர்களை பங்கு சந்தை வர்த்தகத்தில் லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தி ஏமாற்றியதாக கிளிண்டன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்கப்பட்ட போதிலும் பல்லாவரம் குற்ற பிரிவு ஆய்வாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து பல கோடி ஏமாற்றிய கிளிண்டனுக்கு பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண ஹாலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
மாப்பிள்ளையை தாக்கிய கும்பல்
பணத்தை இழந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி திருமணம் நடைபெற்ற திருமண மண்டபத்துக்கு, சென்று பணத்தை ஏமாற்றி மாப்பிள்ளை கோணத்தில் இருந்த கிளின்டனை கையக்களமாக பிடித்ததோடு அனைவரும் ஒன்று சேர்ந்து தர்ம அடி கொடுத்ததால் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு இரத்தம் சுட்டியது. அது மட்டும் இல்லாமல் பணத்தை இழந்தவர்கள் ஆக்ரோசமாக தாக்கியதில் அங்கிருந்தவர்கள் மாப்பிள்ளையை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
முதலுதவி முடிந்த நிலையில் கிளின்டன் தன்னை தாக்கியதாக, கூறி சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் மோகனப்பிரியா உட்பட பலர் மீது புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் தங்களை ஏமாற்றி பல கோடி பணத்தை சுருட்டிய நபர் மீது மீண்டும் பல்லாவரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.





















