கடந்த 2019ல் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல நிகழ்ச்சிக்கு வைத்திருந்த பேனர் விழுந்ததில், ஸ்கூட்டரில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் சுபஸ்ரீக்கு நியாயம் கேட்டு கேள்வி எழுப்பினர். அதனால் அன்றைய தினம் முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் கைது செய்யப்பட்டார். சட்டரீதியான நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பேனர்கள் வைக்க நீதிமன்ற உத்தரவும் கிடைத்தது. அதன் பின் தற்போது ஆட்சி மாறிய பின் திமுக சார்பில் பேனர்கள் வைக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அதை மீறி பல இடங்களில் அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் பேனர்கள் வைக்கப்படுகிறது. அவ்வாறு விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்ற விழா ஒன்றுக்கு கொடிகம்பம் வைத்த போது மின்கம்பி உரசி 13 வயதான தினேஷ் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுபஸ்ரீ மறைவின் போது துவக்கத்தில் எப்படி அந்த வழக்கை நீர்த்து போக போலீசார் முயற்சி செய்தார்களாே... அதே போல் தான் தற்போதும் தினேஷ் வழக்கில் நடக்கிறது. சுபஸ்ரீக்கு எழுப்பப்பட்ட நியாயம்... தினேஷிற்கு மறுக்கப்பட்டதா... மறைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில், சுபஸ்ரீ இறப்பின் போது தமிழ்நாட்டில் முக்கிய பிரபலங்களும், கட்சிகளும் எழுப்பிய கண்டன குரல்களை ரீவைண்ட் செய்கிறோம்...