தேனியில் பைனான்சியர் படுகொலை: வீட்டு வாசலில் நடந்த கொடூரம்! 6 பேர் கைது, அதிர்ச்சி தரும் காரணம்!
தேனியில் நேற்று முன்தினம் பைனான்ஸ் நிறுவனர் தனது வீட்டு வாசலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி கோட்டைகளம் தெரு நேருஜி ரோட்டைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 72), பைனான்சியர். இவரது மனைவி வசந்தா. மகன், மகள்கள் வெளியூரில் வசிக்கின்றனர். நேற்று முன் தினம் காலை பாண்டியன் ரேஷன் கடைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே வந்தார். வீட்டு வாசலில் மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே பாண்டியன் இறந்தார்.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து டி.எஸ்.பி முத்துக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர், ராமலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். முன்விரோதம் அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையால் கொலை நடந்ததா என விசாரித்து வந்தனர்.
தேனி நகராட்சி அலுவலகம் அருகே வசித்து வந்த பழக்கடை பாண்டி (72) என்பவர் தேனியில் பல்வேறு நபர்களுக்கு வட்டிக்கு பணம் வழங்கி பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்த பழக்கடை பாண்டியை ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பழக்கடை பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் (38), பிரபாகரன் (34), வீரபாண்டி (27), சிவக்குமார் (44), வைரம் (20), மனோஜ் குமார் (21) ஆகியோர் என கண்டறிந்து ஆறு நபர்களை கைது செய்து தேனி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஆறு நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்று பின் தேனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக தேனி போலீசார் அழைத்துச் சென்றனர்.






















