நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை ஈண்முகா நகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கிருத்திகா இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். நடராஜன் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை (நேற்று) காலை கிருத்திகா பரமத்தியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று வருவதாக கணவர் நடராஜனிடம் கூறிவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது, வீட்டில் நடராஜன் மட்டும் தனியாக இருந்தநிலையில், மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டுக்குள் அரிவாளால் நடராஜனின் கழுத்து கை கால் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். முடிந்தளவு தடுக்க முயன்ற நடராஜன் ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
நடராஜனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது நடராஜன் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுப்பட்ட நபர் அக்கம் பக்கத்தினரை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளார். அந்த மர்ம நபரை விரட்டிச்சென்ற அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து பரமத்திவேலூர் காவல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த கிடந்த நடராஜனை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நடராஜனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொலை வெறி தாக்குதல் நடத்தியவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடராஜனின் மனைவி கிருத்திகாவுக்கு கோபாலன் என்ற நபருக்கும் தொடக்கத்தில் நட்பு ஏற்பட்டு நாளடையில் அது தவறான உறவாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகி வந்ததை அறிந்த கணவர நடராஜன், தனது மனைவியை கண்டித்ததால் பலமுறை அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் நடராஜனை தீர்த்துக் கட்ட முடிவெடுத்த கிருத்திகா. காதலன் கோபாலுடன். சேர்ந்து தனியார் உணவு விடுதி ஒன்றில் வேலைபார்த்து வந்த யோகேஸ்வரனை கூலிக்கு அமர்த்தி நடராஜனை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
தொடர்ந்து, திட்டமிட்டபடி சம்பவத்துக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறிய கிருத்திகா வீட்டில் கணவர் நடராஜன் தனியாக இருக்கும் தகவலை காதலன் கோபாலிடம் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் கொடுத்ததும் யோகேஸ்வரன் அரிவாளுடன் வீடு புகுந்து நடராஜனை சரமாரியாக வெட்டியதாக காவல்துறையில் தெரிவித்துள்ளார். கணவனை கொலை செய்ய கூலிக்கு ஆள் அனுப்பி விட்டு அப்பாவி போல் நாடகமாடிய மனைவி கிருத்திகாவை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவான காதலன் கோபாலை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்