கேரளாவில் 75 வயது மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகளும், மருமகனும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கொலை செய்யப்பட்ட மூதாட்டி

இந்த சம்பவத்தில் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலி தான் கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீசுக்கு வழிகாட்டுதலாக இருந்துள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம். கேரளாவின் திருச்சூரில்  தான் இந்த சம்பவம் நடைபெற்றுளது. அங்குள்ள முண்டூர் பகுதியில் கடந்த நவம்பர் 23ம் தேதி அதிகாலையில் தங்கமணி என்ற பெண்ணின் உடல் அவரது வீட்டின் பின்புறம் ஒரு பக்கத்தில் சடலமாக கிடப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டறிந்தனர்.

உடனடியாக இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கமணியின் முகத்தில் காயங்கள் இருந்ததால் அவர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் முடிவு செய்திருந்தனர். உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அறிக்கையில் தங்கமணி உயிரிழப்பு ஒரு கொலை என்பது தெரிய வந்தது.

Continues below advertisement

காட்டிக்கொடுத்த காணாமல் போன சங்கிலி

இதனையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது தங்கமணி ஒரு சங்கிலியை அணிந்ததாகவும், அவரது உடலை கண்டுபிடித்தபோது அதனை காணவில்லை எனவும் அக்கம் பக்கத்து மக்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து இதனை முன் தகவலாக கொண்டு தங்கமணியின் மகள் சந்தியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

ஏற்கனவே தனது கணவரிடமிருந்து விவகாரத்து பெற்று தனது தாயாருடன் தங்கணியுடன் வசித்து வருகிறேன். அவர் அருகில் இருந்த 29 வயது கொண்ட நிதின் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வந்த நிதினுக்கு உதவி செய்ய நினைத்து சந்தியா, தனது தாயாரிடம் தங்க செயினை கேட்டுள்ளார். அதனை அடமானம் வைத்து நிதினுக்கு உதவப் போவதாக கூறியுள்ளார்.

நாடகமாடிய காட்சி

ஆனால் இதற்கு தங்கமணி கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதில் தனது தாயார் தங்கமணியை சந்தியா கழுத்தைப் பிடித்து தள்ளியதில் அவரது தலை தரையில் மோதி உயிரிழந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து அவர் தவறி விழுந்து இறந்ததாக சந்தியாவும், நிதினும் அவரது மரணத்தை மாற்றி அமைக்க முயன்றனர். ஆனால் பிரேத பரிசோதனை மரணம், தங்க செயின் காணாமல் போனது போன்றவை வழக்கின் வேகத்தை மாற்றி இருவரையும் கைது செய்யும் நிலைக்கு சென்று விட்டது. காதலனுக்காக பெற்ற தாயையே கொலை செய்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.