புதுச்சேரியில் தேசியக்கொடி ஏற்றிய முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை அமுத பெருவிழாவாக அனைத்து வீடுகளிலும் 3 நாட்கள் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில்
புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வை நகரைச் சேர்ந்த அப்துல் கயூம் (72) என்பவர், கடந்த சனிக்கிழமை தனது வீட்டு மாடியில் கொடியேற்ற முடிவு செய்து, இதற்காக இரும்பு கம்பியில் தேசிய கொடியை கட்டி ஏற்ற முயன்றார். எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பியானது, வீட்டினருகே செல்லும் மின்கம்பியில் உரசியது. இதில் அப்துல் கயூம் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு அவரது குடும்பத்தினர் தகவல் தந்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் தேசியக்கொடி ஏற்றிய முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?
வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது. மனித உடல், மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், நாம் மின்சாரத்தைத் தொடும் போது, மின்னோட்டம் உடல் முழுவதும் பரவி, இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் இயக்கத்தை நிறுத்தி, ஆபத்தை வரவழைக்கிறது. உடலில் பாயும் மின்சாரத்தின் அளவு, மின்சாரத்துடன் உடல் தொடர்பு கொண்டிருக்கும் நேரம் இவற்றைப் பொறுத்து, மூன்று வகை பாதிப்புகள் நமக்கு ஏற்படுகின்றன. (கடுமையான மின்னல் தாக்கும் போதும் இதே ஆபத்து நிகழ்வதுண்டு). மின்சாரம் தொட்ட இடத்தில் தீப்புண்கள் உண்டாவது. தோல், தசை, நரம்பு போன்ற உடல் பகுதிகள் அழிந்துபோவது.மயக்கம் அடைவது; அதைத் தொடர்ந்து மரணம் நிகழ்வது.
பாதுகாப்புக்கு 15 வழிகள்
1.மின் வயர்களையும் மின்கருவிகளையும் குழந்தைகள் தொடாத அளவுக்கு உயரமான இடங்களில் வையுங்கள்.
2.மின் ஆபத்து பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.
3.மின் கருவிகளை வாங்கும்போது, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகளையும் தெளிவாகத்
4.தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
5.மின்கருவிகளை இடம் விட்டு இடம் நகர்த்தும்போது மின் இணைப்பை நிறுத்தி விடுங்கள்.
6.ஈரத்தோடு மின் கருவிகளைத் தொடாதீர்கள்.
7.தரமான, உயர்ரக மின்வயர்கள், மின்பொத்தான்கள், மின்கருவிகள் முதலியவற்றையே பயன்படுத்துங்கள்.
8.மின் கருவிகளை நிறுவுவதற்கும் மின்கருவிகளைப் பழுது பார்ப்பதற்கும் தொழில்முறையில் படித்த, தகுதிபெற்ற மின்வினைஞரையே பயன்படுத்துங்கள்.
9.தொங்கிக்கொண்டிருக்கும் மின்கம்பிகளையோ,மின்வயர்களையோ தொடாதீர்கள்.
10.உடைந்துபோன அல்லது பழுதான மின்கருவிகளைப் பயன்படுத்தாதீர்கள்.
11.மின்வயர்கள் உறை இழந்திருந்தால், உடனடியாக அவற்றைச் சரிசெய்யுங்கள் அல்லது புதிய மின்வயர்களைப் பயன்படுத்துங்கள்.
12.மின்பொத்தான் துவாரத்தில் ஊக்கு, கம்பி போன்ற உலோகக்குச்சிகளைச் சொருகாதீர்கள். மின்பொத்தான் துவாரங்களில் பாது காப்பான ’மின்மூடி’களை மட்டுமே சொருக வேண்டும். அவசரத்துக்கு வயர் முனைகளை மட்டும் சொருகுவதைத் தவிருங்கள்.
13. திறந்திருக்கும் மின்பொத்தான் துவாரங்களுக்கு மூடி போடுங்கள். வானொலி, தொலைக்காட்சிப்பெட்டி, சலவைப்பெட்டி, தண்ணீர் வெப்பமூட்டி, கைப்பேசி மின்னூட்டி முதலியவை பயன்பாட்டில் இல்லாதபோது மின் இணைப்பைத் துண்டித்துவிடுங்கள்.
14 .உயர்அழுத்த மின்சாரம் செல்லும் இடத்துக்கு அருகில் செல்லாதீர்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்