பப்ஜி விளையாட அனுமதிக்காததால் தாய் ஒருவரை சிறுவன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்து கல்வி கற்று வந்தனர். அப்போது அவர்கள் அதிக நேரம் ஆன்லைனில் செலவிட நேரிட்டது. அந்த சமயத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் அவர்கள் அதிகமாக மூழ்கும் நிலை ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக பப்ஜி என்ற விளையாட்டிற்கு பல சிறுவர்கள் அடிமையாக மாறினர். இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு மீண்டும் BGMI என்ற பெயரில் இந்தியாவில் வந்தது.


நடந்தது என்ன?


இந்நிலையில் பப்ஜி விளையாட அனுமதிக்காத தாயை சிறுவன் ஒருவன் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் கிழக்கு பகுதியில் சமீபத்தில் ஒரு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான புகார் காவல்துறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து கிழக்கு உத்தரப்பிரதேச காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. 


 






இதுகுறித்து கிழக்கு லக்னோ ஏடிசிபி, “தன்னுடைய தாய் பப்ஜி விளையாட அனுமதிக்காததால் சிறுவன் ஒருவன் அவரை சுட்டு கொலை செய்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அச்சிறுவன் நீண்ட நாட்களாக பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அதை தாய் கண்டித்ததால் அச்சிறுவன் தன்னுடைய தந்தையின் துப்பாக்கியை எடுத்து சுட்டு கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். பப்ஜி விளையாட அனுமதிக்காத தாயை மகன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமை:


இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான குற்றசம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் ஹைதராபாத்தில் சிறுவன் ஒருவன் தன்னுடைய தாயின் வங்கி கணக்கிலிருந்து 36 லட்சம் ரூபாய் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதன் மூலம் பல சிக்கல்கள் உண்டாகி வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண