விழுப்புரத்தில், நேற்று பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹீம், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் குடும்பத்துக்கு, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களில் வணிகர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விழுப்புரம் நான்குமுனைச் சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதேபோல்,  கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் உறவினர்களில் ஒரு பகுதியினர், விழுப்புரம் அடுத்த விராட்டிக்குப்பம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இது தனிப்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக, ஏற்பட்ட தகராறின்போது, அங்கு தடுக்க வந்த நபர் துரதிஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக, முதலமைச்சர் இன்று பேரவையில் பேசியதற்கு, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அப்போது, குடும்ப பிரச்சனையால் இப்ராஹீம் இறந்து போகவில்லை. அவர், கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, இதனை அரசு கவனத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகள் மீது  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், சம்பவ நடந்த பல்பொருள் அங்காடிக்கு முன்பாக, கொலை செய்யப்பட்ட இப்ராஹீம் உடலை வைத்து, அவரது உறவினர்களில் மற்றொரு பகுதியினர், தங்களது கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரத்தில் நான்குமுனைச் சந்திப்பு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் மட்டுமின்றி, பல்பொருள் அங்காடிக்கு முன்பாக, இறந்தவர் உடலை வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண