கோவை சிங்காநல்லூர் பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ ஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கில் 24 வயது இளைஞருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Continues below advertisement

சோதனையில் பிடித்த 600 கிராம் கஞ்சா

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  அப்போது கழிவறை அருகே இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறி அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அவரிடமிருந்து ஒருகிலோ 600 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டத்தைசேர்ந்த சரவணன் என்பதம் தற்போது திருப்பூரில் குடியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Continues below advertisement

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோவை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு நீதிபதி ராஜலிங்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சரவணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.