தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட டீசல் விற்பனையானது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மீனவர்கள் கடலுக்கு செல்ல படகுகளுக்கு இந்த வகை கலப்பட டீசல் உபயோகபடுத்துகின்றனர். இது சந்தையில் விற்பனை செய்யபடும் டீசலை விட விலைகுறைவாக கிடைப்பதால் இதனை அவர்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சமீப காலங்களாக தூத்துக்குடியில் இந்த பயோ டீசல் அதிக அளவில் விற்கபடுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் துணைக்காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் 3 தனிப்படைகள் அமைத்து பயோ டீசல் விற்பனை செய்பவர்களை கண்காணித்து வந்தார்.
இந்நிலையில் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் கலப்பட டீசல் பதுக்கி வைக்கபட்டுள்ளதை அறிந்த போலிசார் அங்கு விரைந்து சென்றனர். அருண் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனை சோதனையிட்டதில் அங்கு கலப்படம் செய்து கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரி, டீசலை அங்கிருந்து எடுத்து செல்ல பயன்படுத்திய சிறிய லோடு வேன், அதனுடன் டீசல் பேரல்கள் மற்றும் சின்டெக்ஸ் டேங்குளும் இருப்பதை கண்டறிந்தனர். அத்துடன் அங்கு இருந்த ராஜகோபால், புஷ்பராஜ், ராமசாமி, பிரவீன், பவுல் அந்தோணி மற்றும் டேனி ஆகியோரை கைது செய்த போலிசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் அங்கிருந்த 40 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல், கடத்தலுக்கு பயன்படுத்திய டேங்கர் லாரி, உட்பட சுமார் 80 லட்சம் அளவிலான பொருட்களையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
அப்போது ஏ எஸ் பி சந்தீஷ் டேனியல் என்பவரிடம் விசாரனை செய்து கொண்டிருந்தார். டேனியல் டீசலுக்கான பில்லை காட்டுவதாக கூறியபடி அங்கிருந்து நழுவி தப்பியோட முயன்றார். இதனை கண்ட தனிப்படை போலிசார் தப்பியோடிய டேனியை காட்டுக்குள் துரத்தி சென்று பிடித்து வந்தனர். மேலும் மற்றொரு குற்றவாளியான வேலுவை போலிசார் தேடி வருகின்றனர்.மேலும் இதில் போலிஸ் விசாரணையில் தப்பியோடி போலீசாரால் விரட்டி பிடிக்கபட்ட தூத்துக்குடி மீனவரணி அமைப்பாளரான டேனியல் தூத்துக்குடி 24 வது வார்டு பெண் திமுக கவுன்சிலர் மெட்டில்டா என்பவரது கணவர் என்பது குறிப்பிடதக்கது.
இது குறித்து தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கலப்பட டீசல்கள் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன படகளுக்கு இந்த டீசல் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இது எங்கிருந்து வருகிறது என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன இதில் தூத்துக்குடி சிப்காட் அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் வைத்து கலப்பட டிசைன் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெங்களூரில் இருந்து 20000 லிட்டர் டீசல் எந்தவித ஆவணங்களமின்றி திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு அவை இந்த குடோனில் வைக்கப்பட்டு அதோடு மண்ணெண்ணெய் உள்ளிட்ட சில சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டு டீசல் தயாரிக்கப்படுகிறது.
இந்த குடோனில் ஒரு பெரிய தொழிற்சாலை போன்று கலப்பட டீசல் தயாரிக்கப்படுகிறது இந்த கலப்பட டீசல் மிகவும் ஆபத்தானது இவர்கள் இதனை ஆபத்தான முறையில் கையாண்டு வருகின்றனர் என்று கூறிய அவர்,இங்கு தயாரிக்கப்படும் டீசலானது தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீன்பிடி படகுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது அரசு மீன்பிடி படங்களுக்கு டீசல் மானியம் வழங்கினாலும் அவர்களுக்கு அதிகமான டீசல் தேவைப்படும் சூழ்நிலையில் இங்கிருந்து இந்த டீசலை வாங்குகின்றனர் இந்த டீசல் ஆனது வெளிச்சந்தையில் கிடைக்கும் டீசலை விட விலை குறைவாக உள்ளதால் மீனவர்கள் இதனை வாங்குகின்றனர் என்று அவர் கூறினார்.
இந்த டீசல் மீன்பிடி படகுகளில் உபயோகப்படுத்தும் போது படங்களில் உள்ள இன்ஜின் பழுது ஏற்படும் என்ற எச்சரிக்கையும் அவர் விடுத்தார் இந்த இந்த கலப்பட டீசல் பயன்படுத்துவதால் தொழிற்சாலையை விட கடல் பகுதி அதிகம் மாசு ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கலப்பட டீசல் தயாரிக்கும் செயலில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவரிடமிருந்து 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக இவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் தடை சட்டத்தின் மேல் இது நடவடிக்கை எடுக்கப்படும் இந்த கலப்பட டீசல் தயாரிப்பது விநியோகம் செய்வது மூலமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரி இழப்பீடு ஏற்படுகிறது என்றார்.