நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் அருகே தெற்கு உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திமுக பொன்னுதாஸ் என்ற அபே மணி, இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும் சுபேசன் மற்றும் சரண்யா என 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் பாளையில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். 38 வது வார்டு செயலாளராக இருந்து வருகிறார், அபே மணி என்று அழைக்ககூடிய பொன்னுதாஸ் ( வயது 38 ). வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அபே மணி தனது தாயார் பேச்சியம்மாளை கவுன்சிலராக போட்டியிட வைக்க கட்சியில் விருப்பமனு பெற்றுள்ளார். இது தொடர்பான திமுக கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் அதற்கான நேர்காணலிலும் கலந்து கொள்ள இருந்தார்.
இந்த நிலையில் அபே மணி நேற்று இரவில் தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் போது வீட்டின் வாசல் வரை பின்னால் ஆம்னி கார் அவர் பைக் மீது மோதி உள்ளது. அதில் அவர் நிலை தடுமாறி கீழே விழ காரில் இருந்து வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் விட்டு தப்பியோடினர்.. பொன்னுதாஸ் என்ற அபே மணி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே தாய் கண் முன்னே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த பொன்னு தாஸின் தாயார் பேச்சியம்மாள் நடந்த சம்பவத்தை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இரவு 11 மணி என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. ஆனால் கூச்சல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து பொன்னுதாஸின் உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை ஆணையாளர் துரைகுமார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார்.மேலும் தடவியல் நிபுணர்களும் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்.
பாளை போலிசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலின் உட்கட்சி பூசலில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா அல்லது பாளையங்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடையை குத்தகைக் எடுத்த பொன்னுதாஸ் அதனை வரும் 1 ஆம் தேதி திறக்க உள்ளார். இதனால் அவருக்கும் வேறு ஒரு முக்கிய பிரமுகருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்ற கோணங்களில் காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் கொலை நடந்த இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், கொலை செய்யப்பட்ட பொன்னுதாஸ் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கொலையில் நியாயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மூலம் எடுப்பதாக உறுதியளித்தார்.இந்நிலையில் காவல் துறையினர் சம்பவ நடந்த இடம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவிக்களை கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசியலில் இருந்து பல்வேறு உதவிகளை எனது மகன் மக்களுக்கு செய்து வந்தான், இந்த தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் எனவும் கூறி வந்தான், தனது 27 வயதில் தன் கணவரை இழந்து வாழ்ந்து வரும் நிலையில் வேண்டாம் என்று கூறினேன், ஆனால் என் கண் முன்னே என் மகனை வெட்டி சாய்த்து விட்டனரே என கண்ணீர் மல்க பேச்சியம்மாள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது, காரில் வந்த கும்பல் திமுக பிரமுகரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,