திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஓமந்தூரார்- பாண்டீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 15 வயதில் 10 வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்த 15 வயது மகன் கடந்த பிப்ரவரி 27 ம் தேதி தனது தந்தையை கொலை செய்துவிட்டதாக தெரிவித்து கையில் கிரிக்கெட் மட்டையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.


இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், “குடும்ப தகராறில் தாயை என் தந்தை பயங்கரமாக அடித்தார். அப்பொழுது தான் ஆத்திரத்தில் கிரிக்கெட் மட்டையால் தனது தந்தையை அடித்து கொலை செய்ததாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த 15 வயது சிறுவனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதித்தனர்.


இந்தநிலையில் ஓமத்தூராரின் தந்தை ரெங்கசாமி, தனது மகன் கொலை செய்த நிகழ்வில் அவரது மனைவி பாண்டீஸ்வரி உள்ளிட்ட அவர்களது உறவினர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் 4 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கை காவல்துறையினர் மறுவிசாரணை செய்தனர். 


மறுவிசாரணைக்கு பிறகுதான் திடுத்திடும் தகவல் ஒன்றை கண்டறிந்தனர். அதில், பாண்டீஸ்வரி மற்றும் அவரது குடும்பமே சேர்ந்து ஓமத்தூராரை கொலை செய்தது தெரியவந்தது. பாண்டீஸ்வரி பெயரில் சத்திரப்பட்டி மற்றும் பழனியில் சொந்த வீடு இருந்துள்ளது. மதுவுக்கு அடிமையான அவரது கணவர் ஓமந்தூரார் அந்த இரண்டு வீடுகளையும் தனது பெயருக்கு மாற்றித்தரும்படி தினந்தோறும் பாண்டீஸ்வரியை அடித்து கொடுமை செய்துள்ளார். 


இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12 ம் தேதி சம்பவத்தன்று பாண்டீஸ்வரியின் உறவினர்கள் ஓமந்தூரர் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்பொழுது மீண்டும் ஓமந்தூரர் தகராறு செய்ததோடு, பாண்டீஸ்வரியை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த பாண்டீஸ்வரியின் உறவினர்களான கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகியோருடன் பாண்டீஸ்வரி, அவரது 15 வயது மகனும் சேர்ந்து ஓமந்தூராரை சரமாரியாக கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளனர். நிலையிழந்த ஓமந்தூரார் அங்கையே மரணமடைந்துள்ளார். 


இதையடுத்து 15 வயது சிறுவன் என்பதால் கொலை வழக்கில் தண்டனை குறைவு என்று அவனை மட்டும் கொலை வழக்கில் சரணடைய பாண்டீஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டம் தீட்டியுள்ளனர். விசாரணையில் எல்லாம் தெரியவர ஓமந்தூராரை கொலை செய்த பாண்டீஸ்வரி, கிருஷ்ணவேனி, லட்சுமி, ராமையா ஆகிய 4 பேரையும் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண