தாயை இழிவாக பேசிய முதியவர்; குத்திக்கொன்ற இளைஞர் - பழனி அருகே பயங்கரம்
பழனி அருகே தனது தாயாரை இழிவாக பேசிய முதியவரை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி அருகே கடைவீதிக்கு சென்ற தாயாரை அநாகரிகமாக பேசிய 75 வயது முதியவர் கத்தியால் குத்தி கொலை செய்யபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம் பட்டி வடக்கு தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன் (75 ). தனது மகள் பார்வதி (40 ) உடன் வசித்து வருகிறார். இன்று காலை வீட்டிலிருந்த மாரியப்பன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான மாசிலாமணி (28 ) என்ற இளைஞர் திடீரென மாரியப்பன் வீட்டில் நுழைந்து மாசிலாமணி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதில் முதியவர் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க சென்ற மகள் பார்வதியையும் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து பழனி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் இறந்த மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய உறவினராக மாசிலாமணி என்பவரது குடும்பத்திற்கும், மாரியப்பன் குடும்பத்திற்கு பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மாசிலாமணியின் தாயாரை கடைவீதியில் வைத்து அநாகரிமாக மாரியப்பன் பேசியுள்ளார்.
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை! ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
இதனால் மனமுடைந்து மகன் மாசிலாமணியிடம் கூறியுள்ளார். ஏற்கனவே அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ள நிலையில் இதில் ஆத்திரம் அடைந்த மகன் மாசிலாமணி முதியவர் மாரியப்பனை கத்தியால் குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக குற்றவாளியான மாசிலாமணியை கைது செய்து, கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி அருகே தனது தாயாரை இழிவாக பேசிய முதியவரை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.