சேலம் மாவட்டம் உடையாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (60). இவர் சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் தாபா ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சமீப காலமாக தாபா ஹோட்டலை அவரது மகன் நாகராஜன் கவனித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாபாவில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் கந்தசாமி தாபாவிற்கு வந்து படுத்துக்கொள்வார் என கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜோசப் (வயது 30) என்பவன் தாபாவில் வேலை இருந்தார்.



குடும்பம் வறுமையில் உள்ளது வேலை தாருங்கள் என கந்தசாமியிடம் கேட்டு ஜோசப் வேலையில் சேர்ந்து என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தாபாவில் கந்தசாமி படுத்து இருந்தார். அப்போது 'நள்ளிரவில் தாபாவிற்குள் பொருட்கள் சிதறி விழுந்தது. திருடன் யாரும் தாபாவிற்குள் புகுந்து விட்டானோ என எண்ணிய கந்தசாமி உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு தாபா பணியாளர் ஜோசப் பொருட்களை திருடி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சடைந்த கந்தசாமி, ஜோசப்பிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ஜோசப் கீழே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து கந்தசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கந்தசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ஜோசப் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.



இதை அறிந்த ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் இன்று அதிகாலை சம்பவ இடம் சென்று கந்தசாமியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மோப்ப நாய் கொண்டு ஜோசப்பை தேடினார். இந்த கொலையை அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் தனிப்படை அமைத்தார். தீவிர தேடுதலுக்கு பின்னர் அரியானூர் அருகே பதுங்கி இருந்த ஜோசப்பை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.