விழுப்புரம்: திண்டிவனம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பொறியியல் பட்டதாரி திருமண செய்து வைக்கவில்லை என வாழை தோட்டத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல் மாவிளங்கை கிராமத்தை சேர்ந்த பெரியாழ்வார் என்பவரின் மகன் ராஜசேகர் வயது (28), இவர் பொறியியல் பட்டதாரி. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.


மேலும் இவர் கல்லூரியில் முதல் மாணவராகவும் திகழ்ந்து வந்துள்ளார். இவருக்கு படிப்பில் அதிக அளவில் ஈடுபாடு உள்ளதாகவும் அதிக படிப்பு காரணமாக வீட்டில் தனியாகவே தனி அறையில் இருந்து வந்துள்ளார். மேலூம் சில நாட்களாக மதுவிற்கு அடிமையாகி இதனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.


இதனால் அவரது பெற்றோர் கோலியனூரில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் அவரை சேர்த்துள்ளனர். அங்கு சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து கடந்த 2ஆம் தேதி வீட்டிற்கு வந்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி தொடர்ந்து பெற்றோர்களை கேட்டுள்ளார். பெற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் யாரும் பெண் தர மாட்டார்கள் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ராஜசேகர் நேற்று தனது வீட்டிற்கு பின்னால் உள்ள வாழை தோட்டத்தில் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.


விவசாய வேலை முடிந்து வந்த ராஜசேகரின் தாயார் மணிமொழி ராஜசேகர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுக்கபட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜசேகர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்


இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.