Crime | டெல்லியில், ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான பகீர் தகவல்கள்..

இரவு 10 மணியளவில் ஹர்தாவிற்கும் இடார்சிக்கும் இடையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட பெண் இந்த கொடூரத்தை எதிர்கொண்டார்.

Continues below advertisement

டெல்லி செல்லும் ரயிலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

யஸ்வந்த்பூர் - நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் பேன்ட்ரி மேனேஜர், பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு பயணித்த 21 வயது பீகாரைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஜான்சியில் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போபாலில் ஓடும் ரயிலில் டெல்லியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் பேண்ட்ரி காரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பேன்ட்ரி கார் மேனேஜர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட போபால் ரயில்வே போலீசாரிடம் புகார் கூறினார்.

இரவு 10 மணியளவில் ஹர்தாவிற்கும் இடார்சிக்கும் இடையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட பெண் இந்த கொடூரத்தை எதிர்கொண்டார்.

வெள்ளிக்கிழமை மதியம் மும்பையில் இருந்து யஸ்வந்த்பூர்-நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ஏறிச் சென்றதாக பாதிக்கப்பட்ட அவரது புகாரில் தெரிவித்துள்ளார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 6 மணியளவில் ஏசி கோச்சில் சென்றார். இரவு 8 மணியளவில் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் கூச்சலிட்டு பார்த்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. பின்னர், அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி எறிந்து விடுவதாக மிரட்டினர்.


அவர் வேறு கோச்சிற்கு சென்று நடந்த சம்பவத்தை குறித்து கூறினார். போபாலை அடைந்ததும், பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.

தொழிலாளர்கள் வெளியே வர பயப்படாமல் ரயிலின் பேண்ட்ரி கார் கோச் உள்ளே இருந்து பூட்டப்பட்டது. ரயில் பெட்டி திறக்கப்பட்டதும் 15 முதல் 20 பேர் இரவிலேயே தடுத்து வைக்கப்பட்டனர், ஆனால் அவர்களில் சிலர் பயணிகள், பேன்ட்ரி காரில் டிக்கெட்டுகளுடன் அமர்ந்திருந்தனர்.

 “தொழிலாளர்கள் வெளியே வர பயப்படவில்லை என்பதால் ரயிலின் பேன்ட்ரி  கார் பெட்டி உள்ளே இருந்து பூட்டப்பட்டது . திறக்கப்பட்ட பின்னர் இரவு முழுவதும் 15 முதல் 20 பேர் கைது செய்யப்பட்டன. ஆனால் அவர்களில் சிலர் பயணிகள், அவர்கள் டிக்கெட்டுகளுடன் பான்ட்ரி காரில் அமர்ந்திருந்தனர்” என்று போபால் ரயில் நிலையத்தின் துணை மேலாளர் அனில் ஷர்மா கூறினார்.

ஓடும் ரயில் இளம்பெண் ஒருவரை பேண்டரி மேனேஜரே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சக பயணிகளிடயே அதிர்ச்சியையும், அச்சத்தையும் கொடுத்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola