Delhi Crime : டெல்லியில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய இளம்பெண்ணை, காதலன் வெட்டிக் கொன்று ஓட்டல் பிரீசரில் வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


டெல்லியில் தொடரும் கொலை:


இதைத்தொடர்ந்து, இதேபோன்ற கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்வது மக்களை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஷர்த்தா கொலை வழக்கை போலவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை அவரது காதலனே கொலை செய்த மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


டெல்லி நஜப்கரில் உள்ள ஒரு உணவு ஓட்டலில் 25 வயதான பெண்ணின் சடலம் ஒன்று குளிர்சாதன பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.  உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 


இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விரிவாக விவரிக்கையில், ”டெல்லியின் நஜப்கரில் ஒரு ஓட்டல் நடத்தி வருபவர் சாஹில் கஹ்லோட். இவர் அதே பகுதியில் இருக்கும் நிக்கி யாதவ் என்ற 25 வயதுடைய ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாகவே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். நிக்கி யாதவுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், சாஹில் கஹ்லோடுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது காதலியான நிக்கி யாதவுக்கு தெரியவந்தது. இதனால் கடும் கோபமடைந்த நிக்கி யாதவ் இது பற்றி கண்டித்துள்ளார்.


சில நாட்கள் கழித்து நிக்கி யாதவ் இது பற்றி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றும்  சாஹிலை வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் நிக்கி யாதவை, சாஹில் கொலை செய்ய திட்டமிட்டார். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய ஆத்திரத்தில் நிக்கி யாதவை துண்டு துண்டாக வெட்டி தனது ஹோட்டலில் உள்ள குளிர்சாதன பெட்டியின்  பிரீசரில் வைத்துள்ளார்”  என்று போலீசார் தெரிவித்தனர்.


மேலும், சந்தேகத்தில் பேரில் அந்த ஹோட்டலின் உரிமையாளரான சாஹில் கஹ்லோட்டை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பின்பு, பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களே நடத்தி வருகிறனர். டெல்லி ஷர்த்தா கொலை சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது அதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


இன்ஸ்டாகிராம் மூலம் காதல்... ஏமாற்றப்பட்ட கேரள பெண் - நடந்தது என்ன..?