Crime : பதைபதைக்க வைத்த கொடூரம்.. பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை...இன்ஸ்பெக்டரின் குரூரம்...நடந்தது என்ன?

Crime : கேரளாவில் வழக்கில் சிக்கிய கணவரை விடுவிப்பதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement

Crime : கேரளாவில் வழக்கில் சிக்கிய கணவரை விடுவிப்பதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement

கேரள மாநிலம், கொச்சி மரடு பகுதியைச் சேர்ந்தவர் சுனு. இவர் கோழிக்கோடு கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கொச்சி திருக்காக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், இன்ஸ்பெக்டர் சுனு உள்பட 6 பேர் மீது திருக்காக்கரை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

இந்த இளம்பெண்ணின் கணவர், ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கிலிருந்து கணவரை விடுவிக்க வேண்டும் என்றால் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கூறி மிரட்டி அந்த இளம்பெண்ணை அவரது வீட்டில் வைத்தும், கடவந்திரா என்ற இடத்தில் வைத்தும் இன்ஸ்பெக்டர் சுனு உள்பட 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என இன்ஸ்பெக்டர் சுனு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் இதுவரை காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த இளம்பெண் கொச்சி திருக்காக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் உடனடியாக இன்ஸ்பெக்டர் சுனு உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் நேற்று திருகாக்கரை போலீசார் கோழிக்கோடு சென்று இன்ஸ்பெக்டர் சுனுவை கைது செய்துள்ளனர். பின்பு, அவரை விசாரணைக்காக கொச்சிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் கணவரின் நண்பர், ஒரு கோயில் ஊழியர் உட்பட மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம் முளவுகாடு இன்ஸ்பெக்டராக சுனு இருந்தபோது புகார் கொடுக்க வந்த கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டு, 7 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த அவர், கோழிக்கோடு கடலோர இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார், பின்பு இவர் மீது பல வழக்குகளும் இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க

Crime: நரபலிக்காக கடத்தப்பட்ட 2 மாத குழந்தை...! விபரீதச் செயலில் ஈடுபட்ட பெண்..! நடந்தது என்ன..?

Crime: வகுப்பறையில் முத்தம்.. 3 மாதங்களில் 15 மாணவர்களிடம் பாலியல் அத்துமீறல்... அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

Continues below advertisement
Sponsored Links by Taboola