உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டார் நொய்டாவில் வசித்து வருபவர் அஜய் தாகூர். இவரும் அதே பகுதியை சேர்ந்த பயல் பாஹ்தி (22) இவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். பயலின் பெற்றோர் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டனர். தனது உறவினராக சுனில் என்பவரிடம் இருந்து பயலின் பெற்றோர் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.
கடனை திருப்பி தரும்படி பயலின் பெற்றோரிடமும் சுனில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதேபோன்று, பயலின் அண்ணி மற்றும் அவரது சகோதர்கள் 2 பேரும் பயலின் பெற்றோரும் பணத்தை திருப்பி தரும்படி தொந்தரவு செய்துள்ளனர்.
கடன் தொல்லை:
இதனால் பயல் வீட்டில் அமைதியற்ற சூழ்நிலையே நிலவி வந்தது. கடன் தொல்லை காரணமாக பயலின் பெற்றோர் மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்கள், சுனில், அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரை பழிவாங்க வேண்டும் பணத்தை திருப்பி தராமல் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும், கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கவும் பயல் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தீவிரமாக யோசித்து வியப்பான திட்டம் தீட்டினார். தான் சிக்காமல் தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கொலை செய்ய பயல் முடிவெடுத்தார். இது குறித்து பயல், தனது காதலனான அஜய் தாக்கூருக்கு கூறினார். அந்த சமயத்தில் பயல் பாஹ்தி தனது காதலன் அஜய் தாகூருடன் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மாலுக்கு சென்றுள்ளனர். அங்கு தன்னை போன்ற உடல் அமைப்பு கொண்டு வணிக வளாகத்தில் வேலை செய்து வந்தவர் ஹேமா சவுதிரியை (28) பார்த்துள்ளார். ஹேமா சவுதிரியின் உடல் தன்னை போன்று உள்ளதை கவனித்த பயல், காதலன் அஜய்யிடம் தெரிவித்துள்ளார்.
சதித்திட்டம்:
பின்பு, ஹேமாவை கொன்று தான் உயிரிழந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைக்க திட்டமிட்டார் பயல். இந்த திட்டத்தை அமல்படுத்த காதலனான அஜய் தாக்கூரை பயன்படுத்திக் கொண்டார். அதன்படி, அஜய் தாக்கூரை மாலில் வேலை செய்யும் ஹோமாவிடம் பழகுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதை கேட்டு அஜய் தாக்கூரும் அவருடன் நட்பாக பழகினார். ஒரு நாள் அதாவது நவம்பர் 12-ஆம் தேதி ஹேமாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு அஜய் தனது காதலி பயலின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு வீட்டில் இருந்த பயல் மற்றும் அவரது காதலனான அஜய், ஹேமாவை கழுத்தறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலை செய்த பின் ஹேமாவின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றனர். பின்பு, உயிரிழந்த ஹேமாவின் உடலில் பயல் உடையை அணிந்தார். கொத்திக்கு எண்ணெய் முகத்தில் பட்டதால், தனது அழகு போய்விட்டதாக ஒரு கடிதம் எழுதி தற்கொலை செய்து கொள்வதாக ஹேமா கடிதம் எழுதியப்படி, பயல் தன் கைப்பட கையெழுத்திட்டார்.
காதலர்கள் கைது:
இதனிடையே வேலைக்கு சென்று வீடு திரும்பாத ஹேமா குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை செய்ததில் அஜய் தாக்கூரை கடைசியாக பார்த்தது தெரியவந்தது. பின்பு, அஜய் தாக்கூரையும், அவரது காதலியான பயலையும் காசிபாத்தில் கைது செய்தனர். கைதான அஜய்யிடம் இருந்து கைத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். பின்பு பெற்றோர் தற்கொலைக்கு காரணமானவர்களை கொலை செய்வதற்காக இதுபோன்று செய்தாக பயல் வாக்குமூலம் அளித்தார்.