திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் இளங்கோ வயது (21). இவர் உணவகத்தில் சப்ளையராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்யார் பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவியை இளங்கோ காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பள்ளிக்கு சென்று வரும் போது எல்லாம் மாணவியை பின்தொடர்ந்தது சென்று வந்துள்ளார். அப்போது இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. மேலும், மாணவி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் மாணவியை கட்டிப்பிடித்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதியை சார்ந்தவர்கள் அவர்கள் இருவரையும் கண்டித்து அனுப்பினார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக  காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளங்கோ மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். பிறகு விடுமுறை நாட்களில் இளங்கோ மாணவியை  தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற இளங்கோ தனிமையில் இருக்கும்போது மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார். 




அதனைத்தொடர்ந்து மாணவிக்கு சில நாட்கள் கழித்து உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக காணப்பட்டார். பிறகு மாணவியை  பெற்றோர் செய்யாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி கர்ப்பமாகி உள்ளது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது இளங்கோ என்பவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை  செய்ததாக நடந்ததை  தெரிவித்தார். இதுகுறித்து உடனடியாக பெற்றோர் செய்யார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். தலைமறைவான இளங்கோவை வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 




திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த டி.வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் வயது (46). இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடைக்கு முட்டை வாங்க வந்துள்ளார். அந்த சிறுமிக்கு குமார் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அருகில் உள்ள கொட்டகை பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து வந்து நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த தாய், மகளை அழைத்துக் கொண்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.