தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் பால முருகன்(33). பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடையவர். குறிப்பாக தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது.


சுமார் 70க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கேரளா போலீசாரின் கஷ்டடியில் இருந்து வந்துள்ளார். அப்போது கடந்த 11.08.23 அன்று கேரள போலிசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். அன்றிலிருந்து ஒரு மாத காலமாக கேரள மாநில தனிப்படை போலீசார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக சென்னை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், மற்றும் தென்காசி பகுதியில் தேடிவந்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் போலீசார் இருந்தனர். மேலும் தமிழக போலீசாரின் உதவியை நாடி தேடி வந்தனர்.  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எ.த. சாம்சன் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயபால் பர்ணபாஸ் ஆகியோர்களின் உத்தரவுப்படி, கடையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கௌதமன், உதவி ஆய்வாளர் திரு நவநீதகிருஷ்ணன், காவலர் திரு.கதிர், திரு. வைகைச்செல்வன் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சேஷகிரி தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் கடந்த 8 ஆம் தேதி அன்று அதிகாலை கடையம் ராமநதி டேம் காட்டுப் பகுதியில் பால முருகனை கைது செய்தனர். பாலமுருகன் தனது அடையாளத்தை மறைப்பதற்காக மொட்டை அடித்து அடையாளத்தை மாற்றி மாறுவேடத்தில் பதுங்கி இருந்துள்ளார். இதனை அறிந்த போலிசார் அவர் இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்று பாலமுருகனை சுற்றி வளைத்து பிடித்து கேரளா போலீசார் வசம் ஒப்படைத்தனர்.


மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி பாலமுருகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக (2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்) கடையம் காவல் நிலைய பகுதியில் வயதான தம்பதியரிடம் அரிவாளை காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, அந்த வயதான தம்பதிகள் கையில் கிடைப்பதை எடுத்து கொள்ளையடிக்க வந்த நபர்கள் மீது வீடி கொள்ளை முயற்சியை தடுத்து மேற்படி குற்றவாளி பாலமுருகனை தாக்கி விரட்டி விட்டனர். இது தமிழக அளவில் பேசப்பட்டு வந்த  நிலையில் அதற்காக அப்போது தமிழக முதல்வரின் கையால் "வீரதம்பதியர்" என்ற விருதும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண