விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 60). இவர் பூசாரி ஆகவும் இருந்து கொண்டு மந்திரத்து வருகிறார். மேலும் இவர் சின்ன நெற்குணம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே பங்க் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல நள்ளிரவு 1 மணி அளவில் தன் கடையை மூடிவிட்டு சின்ன நெற்குணத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் வீட்டு அருகே வரும்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மயிலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் காமராஜருக்கும் மந்திரிப்பதில் அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அதே பகுதியில் சுற்றித் திரிவதால் ரமேஷை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக போலீசார் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். பூசாரியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்