திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் பிரபு வயது (42). இரு சக்கர வாகன மெக்கானிக். இவருடைய மனைவி ஜெயந்தி வயது (35). இவர்களுக்கு சசிகலா வயது (9) என்ற மகளும், கிஷோர் வயது (5) என்ற மகனும் உள்ளனர். நேற்று சிறுமி சசிகலாவுக்கு 9-வது பிறந்தநாள் விழா கொண்டாடினர். இதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாமதியை சேர்ந்த பிரபுவின் மாமியார் ஜோதி அம்மாள் வயது (60) வந்திருந்தார். இரவு சிறுமி பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். விழாவுக்கு வந்த ஜோதி அம்மாள் உள்பட அனைவரும் வீட்டின் மாடியில் படுத்து தூங்கினர். நள்ளிரவு 3 மணி அளவில் மாடியில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முகமுடி அணிந்து கொண்டு ஜட்டியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் மாடியில் ஜோதி அம்மாள் என்பவரின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அப்போது பிரபு மர்ம நபரை பிடிக்க முயற்சி செய்தபோது கையில் வைத்திருந்த கத்தியால் வெட்டி விட்டு உயிர் மேல் ஆசை இருந்தால் ஓடிவிடு என‌ கூறி மிரட்டல் விடுத்து தப்பி ஓடியுள்ளார்.

Continues below advertisement

 

Continues below advertisement

 

அதேபோன்று வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் என்பவர் குடும்பத்துடன் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இதே ஜட்டியுடன் வந்த மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு வந்த ரங்கன் மர்ம நபரை பிடிக்க முயன்ற போது கையில் வைத்திருந்த கத்தியை ரங்கன் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து படுகாயம் அடைந்த ரங்கன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் 9 தையில் போடப்பட்டது. ஒரேநாள் இரவில் வந்தவாசி பகுதியில் இரண்டு இடங்களில் முகமூடி, ஜட்டியுடன் வந்த மர்ம நபர் நகையை திருடிக்கொண்டு, 2 நபர்களை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தகவல் அறிந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

காயமடைந்த ரங்கன் கூறுகையில், “நான் குடும்பத்துடன் வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலை 3.30 மணி அளவில் கதவின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்து பார்த்தபோது முகமூடி அணிந்து ஜட்டியுடன் நின்ற ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார். நீ உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்னை பின்தொடராதே என்று என்னை தலையில் வெட்டிவிட்டு ஓடிவிட்டார். அவர் குண்டாக கருப்பாக இருந்தார்” என்றார். நள்ளிரவு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருக்கும் போதே மூதாட்டியின் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்கச் சங்கிலி ஜட்டியுடன் வந்த மர்ம நபர் பறித்துக் கொண்டு இரண்டு நபர்களை கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்ற சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.