Crime : சமூக வலைதளம் மூலம் பழகி மும்பை பெண்ணை கோவைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (24). இவருக்கும், மும்பையை சேர்ந்த 27 வயதான பெண்ணுக்கும் சமூக வளைதளம் மூலம் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் தங்கள் செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டு அடிக்கடி பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அத்துடன் அடிக்கடி வீடியோ கால் மூலமும் பேசி வந்துள்ளனர்.

இதற்கிடைய அந்த பெண்ணை செந்தில்குமார் பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். எப்போது என்னை பார்க்க வருவீர்கள் என அடிக்கடி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பெண் எதேனும் முக்கியமான நிகழ்ச்சி இருந்தால் சொல் வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.  இதனை அடுத்து, செந்தில் குமாரின் பிறந்தநாள் வந்ததை அடுத்து, தனது காதலியை கோவைக்கு வர சொல்லி செந்தில்குமார் கூறியிருந்தார்.

இதனால் செந்தில் குமாரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அந்த பெண்ணும் மும்பையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர் இரண்டு பேரும் வெளியே சென்று பிறந்தநாளை கொண்டாடினர். செந்தில் குமார் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து இருவரும் அங்கு தங்கினர். அப்போது, அவர் அந்த பெண்ணிடம் உன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த பெண்ணை வலுக்கட்டயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பேசியபடி இருந்த இளைஞர், அந்த பெண்ணிடம் இருந்து ரூ.70,000 பெற்றார்.  பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. அத்துடன் அந்த பெண்ணிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேறு செல்போன் எண்ணில் இருந்த செந்தில் குமாரை தொடர்பு கொண்டார்.  அப்போது அவர் உன்னிடம் பேச விருப்பமில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவை மேற்கு பகுதி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகரிக்கும் குற்றங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு  சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876  புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன.  மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில்  1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.