டெல்லி, உத்தர பிரதேசத்தை அடுத்து தற்போது மத்திய பிரதேசத்தில் மனைவியை இரண்டு துண்டுகளாக கணவர் வெட்டி காட்டுக்குள் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியில் மனைவியை இரண்டு துண்டுகாக கணவர் கோடாரியால் வெட்டி, தலை மற்றும் உடம்பு பகுதியை ஷாதோல் பகுதிக்கு அருகில் உள்ள காட்டில் தனித்தனியாக புதைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கு முன்பாக, ஷாதோல் பகுதியில் நவம்பர் 13-ஆம் தேதி தம்பி மற்றும் உறவினர் காணாமல் போனதாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்திருந்தனர். இந்நிலையில், ஷாதோல் பகுதிக்கு அருகில் உள்ள காட்டில் ஒரு பெண்ணின் ஆடை இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில், அந்த காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணின் தலை மற்றும் உடல் பகுதி கண்டெடுக்கப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை செய்தனர். பின்பு, விசாரணையில், ஷாதோல் பகுதியைச் சேர்ந்த் சரஸ்வதி பட்டேல் உடல் என்று தெரிய வந்தது. பின்பு, குற்றவாளியான ராம் பட்டேலை போலீசார் கைது செய்தனர். பின்பு, ராம் கிஷோர் பட்டேல் விசாரணை செய்ததில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்திருந்தார். அதன்படி ராம் கிஷார் பட்டேல் மற்றும் அவரது மனைவியான சரஸ்வதி பட்டேலுக்கு அடிக்கடி சண்டை வருவது வழக்கம். இதனால் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் சில நாட்களாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.


பின்பு, மனைவியான சரஸ்வதி பட்டேலின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கிஷோர் பட்டேல் தெரிவித்தார். இதனால் இருவருக்கு சண்டை ஏற்பட்டு வந்தது. பின்பு, ஒரு நாள் அவரை காட்டுக்கள் அழைத்து வந்து கோடாரியால் வெட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பின்னர், தலை மற்றும் உடல் பகுதியை வெட்டி காட்டிற்குள் வெவ்வேறு பகுதியில் புதைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.


முன்னதாக, டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


பின்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்திலும் ந்டைபெற்றது. முன்னாள் காதலியை கொலை செய்து 6 பாகங்களாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் யாதவ். இவர், அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக் பூர் கிராமத்தில் வசித்து வந்த ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


இதனால், ஆராதனா மீது பிரன்ஸ் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதற்கு பிறகும் கூட, ஆராதனா பிரின்ஸூடன் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில், யாதவ் தனது பெற்றோர், உறவினர் சர்வேஷ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஆராதனாவை கொல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த நவம்பர் 9 ஆம் தேதி, ஆராதனாவை பிரின்ஸ் 6 பாகங்களாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.