திண்டிவனம் அருகே பயங்கரம் 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் தனியார் வங்கி பெண் மேலாளரை கத்தியால் குத்தி கொலை  செய்த சக வங்கி மேலாளர் மற்றொரு வாகனத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பெண் ஒருவர் கொலை


விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த கீழ் கூத்தப்பாக்கம் புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை சாலை ஓரத்தில் விபத்தில் இறந்து கிடந்தார். இவர் உடல் கிடந்த குறிப்பிட்ட தொலைவில் கார் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டகுப்பம் துணை காவல் கண்காணிப்பாளர்  சுனில் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது விபத்தில் அடிபட்டு சாலை ஓரத்தில் இறந்து கிடந்தவர் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கோபிநாத் வயது 37 என்பதும்,  இவர் மரக்காணம் கரூர் வைசியா வங்கியில் மேலாளராக பணியாற்றியதும் தெரியவந்தது .


காரில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்


காரில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த நெய்வேலி வடக்குத்து இந்திரா நகரை சேர்ந்த பாண்டி என்பவருடைய மனைவி மதுரா பாண்டி (30) என்பது தெரிய வந்தது மதுரா பாண்டி புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் உள்ள கரூர் வைசியா வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் வங்கியில் பணி புரிந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இருவரும் திருமணம் ஆகி குடும்பத்தோடு தனித்தனியே புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கோபிநாத் மதுரா பாண்டி சிறுவரும் ஒரே காரில் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பொழுது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மதுரா பாண்டியை, இசை பேனா கத்தியால் கோபிநாத் கொலை செய்து காரிலேயே உடலை வைத்துவிட்டு புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சென்ற வாகனத்தின் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.


காரணம் என்ன?


திருமணம் மீறிய உறவு தொடர்பாக இந்த கொலை மற்றும் தற்கொலை நடந்ததா? அல்லது இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரது உடலும் புதுச்சேரி காலாப்பட்டு உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட கோபிநாத்தின் மனைவி சாந்தி ப்ரீத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுவை ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். அந்த புகாரில் அளித்த தகவலை வைத்து கொலை மற்றும் தற்கொலை குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


டிஐஜி விசாரணை


 மேலும் இது சம்பந்தமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி ஆகியோர் சம்பவ இடத்தில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்பநாய் தடவையில் நிபுணர்கள் ஆகியோர் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.