திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த எடத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி வயது (45) இவருக்கும் தென்முடியனூர் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரவிச்சந்திரன் தானும், தனது மனைவி கல்பனாவும் இணைந்து கடந்த 20 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு, பொங்கல் சீட்டு, தள்ளு சீட்டு போன்ற சீட்டுகளை நடத்தி வருவதாகவும், தன்னிடம் சீட்டு கட்டி பல நபர்கள் பயனடைந்து உள்ளதாகவும் சுந்தரமூர்த்தியிடம் தெரிவித்துள்ளனர்.


சீட்டுப்பணம்:


மேலும் சிறுசேமிப்பு திட்டத்தில் சேரும்படி அவர் கூறியயுள்ளார். இதனை நம்பிய சுந்தரமூர்த்தியும் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் ரவிச்சந்திரனிடம் சுமார் 10 மாதங்களாக சீட்டு கட்டி வந்துள்ளனர். பின்னர் பண்டிகை நாட்கள் முடிந்து பல நாட்கள் ஆகியும் சுந்தரமூர்த்திக்கு தர வேண்டிய சீட்டுத் தொகை மற்றும் பரிசுத் பொருட்களை தராமல் ஏமாற்றி வந்ததுள்ளார். மேலும் ரவிச்சந்திரனை அவரால் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக தெரிகிறது.



லட்சக்கணக்கில் வசூல்:


இதுகுறித்து சுந்தரமூர்த்தி விசாரித்ததில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் பல பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்துவிட்டு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து சுந்தரமூர்த்தி தலைமறைவான கணவன், மனைவி இருவரையும் கண்டு பிடித்து அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்துறையின்  ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து காவல்துறைக்கு  தெரியவந்தது.




 


இதையடுத்து, காவல்துறியினர் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். ரூ.68 லட்சம் சிறு சேமிப்பு பணம் விசாரணையில் அவர்கள், சீட்டு கம்பெனி நடத்தி சுமார் 1,550 பேரை சிறுசேமிப்பு திட்டத்தில் இணைத்து அதன் மூலம் கிடைத்த ரூ.68 லட்சத்தை அதிக லாபத்திற்காக வேறு நபர்களிடம் சேமிப்பு திட்டத்தில் இணைத்து பணம் செலுத்தியதாலும், தனது பிள்ளைகளின் படிப்பு செலவிற்காகவும் மற்றும் தனது சொந்த செலவிற்காகவும் அப்பணத்தை செலவு செய்து விட்டதால் எங்களிடம் சீட்டி கட்டியவர்களுக்கு எங்களால் பணத்தை திருப்பி தர முடியாமல் திருப்பூருக்கு தப்பி சென்றதாக தெரிவித்துள்ளனர்.


பின்னர் அவர்களை  காவல்துறையினர் கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து விசாரணை நடத்தி  வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர். நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.