Crime: ஆந்திராவில் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் மகள் தற்கொலை செய்துகொண்டதையடுத்து காதலனை பெண்ணின் தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலம் துவாரகா பகுதி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பவன்கல்யாண்(24). இவரும் கொடுங்குபேட்டையைச் சேர்ந்த மரிது ஷியாமளா(18) ஆகியோர் ஜங்காரெட்டிகுடேத்தில் படித்தபோது நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் அவரவர் வீட்டில் கூறினர். இதற்கு இரண்டு பேர் வீட்டிலும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் அவர்களது வீட்டில் ஏற்கவில்லை. இதனால் இருவரும் மனமுடைந்த இருந்தனர். கல்லூரி படிப்பை தொடரவும் அவர் வீட்டில் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 


இந்நிலையில் மனமுடைந்த அந்த பெண் ஷியாமளா என்பவர் கடந்த 5ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மகளின் மரணம் அவர்களது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தந்தை நாகேஸ்வர ராவ் சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதையடுத்து தனது மகளின் காதலனை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார். 


இம்மாதம் 15ஆம் தேதி பவன் கல்யாண் தனது நண்பர் நாகராஜுடன் ஜங்காரெட்டிகுடம் மண்டலம் நிம்மலகுடேமில் உள்ள கால்வாய் கரையில் விருந்து ஒன்று வைத்துள்ளார். அதில் அவர்கள் நண்பர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அந்த விருந்து முடிந்த பிறகு அவர் என்பவர் காணவில்லை. தொடர்ந்து இதுகுறித்து பவன்கல்யாணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.


விசாரணையில், பவன்கல்யாணை ஷியாமளவின் தந்தை நாகேஸ்வரராவ் விருந்து முடித்து அழைத்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், பவன் கல்யாணை கொலை செய்து தனது மகளின் சமாதிக்கு அருகில் அவரது சடலத்தை புதைத்து சமாதி கட்டியதாக போலீசாரிம் வாக்குமூலம் அளித்துள்ளார்.  இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று ஜங்காரெட்டிகுடம் இன்ஸ்பெக்டர் பால சுரேஷ்பாபு, லக்காவரம் எஸ்எஸ்ஐ துர்காமகேஸ்வரராவ் அந்த இடத்திற்கு சென்று சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஜங்காரெட்டிகுடம் அரசு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.