திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கோட்டை வீதி அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் இயங்கி வருகின்றது. இந்த அலுவலகம் பக்கத்தில் அதே அரசு புறம்போக்கு இடத்தில் இரும்பேடு கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணன் என்பவரின் கடை உள்ளது. மேலும் கடையை ஆக்கிரமிப்பு செய்யபட்டதாக சின்னகண்ணன் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். -அதே போல சின்னகண்ணன் மீது தங்களை தரைக்குறைவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகட்சியினர் புகார் தெரிவித்தனர். இருதரப்பினர் ஆரணி நகர காவல்நிலையத்தில் பரஸ்பர புகார் அளித்துள்ளனர். மேலும் இதில் இருதரப்பினரையும் கடந்த 2-ம் தேதி ஆரணி நகர காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.


 


 






 


அப்போது விடுதலைசிறுத்தை கட்சி திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ம.கு.பாஸ்கரன் என்பவர் விசாரணையின் போது நகர காவல் நிலைய துணை ஆய்வாளர்  கிருஷ்ணமூர்த்தி என்ற அதிகாரியை பார்த்து நீ எஸ்.சி (தாழ்த்தபட்டவர்) தானே என்றும் மற்றொரு அதிகாரியான காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் என்பவரை ஓருமையில் மிரட்டல் தோனியில் விசாரணையின் போது பேசும் வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வந்தது. இதன் பின்னர் ஜனவரி 8-ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மற்றும் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகிய இருவர் மீதும் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தார், கட்டிடம் இடித்து ஆக்கிரமிப்பு போன்று 5 பிரிவுகள் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


 




பின்னர் கைது செய்த இருவரையும் ஆரணி மாஜிஸ்ட்ரேட் வீட்டில் ஆஜர் படுத்தி அவர்களை வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லும் பொழுது விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் வாகனத்தை மறித்து கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகிய தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆரணி நகர் முழுவதும் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.பின்னர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.  


 




 


சிறையிலிருந்த பாஸ்கரனுக்கு கடந்த ஜனவரி 26-ஆம் தேதி பிணை கிடைத்தது. வேலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர் பாஸ்கருக்கு மாலை, மரியாதை செய்து காரில் அவரை விடுதலை சிறுத்தை கட்சியினர் பந்தாவாக ஊர்முழவதும் ஊர்வலமாக அழைத்து வந்தனர். விசிகவினர் ஆரணி பகுதியில் அனுமதியின்றி நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு ஊர்வலம் நடத்தினர். அப்போது ஆரணி நகர காவல்நிலையம் அருகே வந்ததும் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் காவல்துறையினருக்கு எதிராக ஒருமையில் பேசி கோஷமிட்டார். அவரது ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.


 




 


அப்போது காவல் நிலையம் அருகே விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கருக்கு சந்தன மாலை அணிவித்து காவல்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்த ஆரணி நகர காவல்நிலையம் முன்பும் ஊர்வலமாக வந்து அச்சறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியபடி ஊர்வலம் வந்தனர். இதனை காவல்துறையினர் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி வேடிக்கை மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது. காவல்துறையை படுமோசமாக விமர்சிக்கும் இந்த வீடியோவில் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




 


இதுகுறித்து காவல்துறையினரின் வட்டாரத்தில் பேசுகையில்; காவல்துறை அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்தியவர்கள், காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டவர்கள் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது அதில் 10 நபர்களை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை பிடிக்க 7 ஸ்பெஷல் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாகவும், தற்போது ஆரணி நகர் பகுதி காவல்துறையினர் கட்டுபாட்டில் உள்ளதாகவும், தெரிவித்தார்.