திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள தண்டராம்பட்டு சாலை தேனீமலை அருகே இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஏடிஎமில் மர்ம கொள்ளையர்கள் முதலில் கொள்ளை அடித்துக் கொண்டு, அதன் பின்னர் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் 10-வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் மர்ம கொள்ளையர்கள் கொள்ளையடித்து கொண்டு பின்னர் ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி செல்லும் வழியில் உள்ள கலசப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இயங்கி வரும் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்துக்கொண்டு மற்றும் போளூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்தில் மர்ம கொள்ளையர்கள் கொள்ளையடித்துக்கொண்டு கண்ணமங்கலம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.



ஆந்திரா மாநில கொள்ளையர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.நான்கு ஏடிஎம் இயந்திரத்திதை உடைப்பதற்கு கேஸ் வெல்டிங் மிஷினை பயண்படுத்தி 4 ஏடிஎம்மை உடைத்து அதில் இருந்த ரூ 56 லட்ச பணத்தை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள் 4 ஏ டி எம் மையத்துடைய சிசிடிவி கேமராவையும் உடைத்துள்ளனர். மேலும் ஆதாரங்களை அழிக்கும் நோக்கோடு கேஸ் வெல்டிங் நெருப்பைக் பயண்படுத்தி தீயிட்டு கொளுத்தி உள்ளனர். குறிப்பாக சிசிடிவி காட்சிகள் பதிவாகவும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை தீயிட்டு கொளுத்தி அழித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா திருவண்ணாமலை எல்லையில் உள்ள சுங்கச்சாவடி மையத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்துள்ளார்.



அதிலும் போளூரில் கொள்ளையில் பயண்படுத்திய டாடாசுமோ கார் அதிலும் பதிவாகியுள்ளது. நள்ளிரவில் நான்கு ஏ டி எம் மையங்களை குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஐ குறி வைத்து கொள்ளையடித்த சம்பவம் எதிரொலியாக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி திருவண்ணாமலைக்கு வருகை தந்து காவல்துறை உயர் அதிகாரி உடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



மேலும் ஆந்திரா மாநிலத்திற்கு எஸ்பி தலைமையில் ஒரு தனிப்பட்டையும் , தெலுங்கனா மாநிலத்திற்கு ஒரு தனிப்பட்டையினர் , கர்நாடக மாநிலத்திற்கு ஒரு தனிப்பட்டை என 3 எஸ்பி தலைமையில் மூன்று மாநிலத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 9 மாவட்ட எல்லையிலும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாகவே, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Crime : திருவண்ணாமலை ஏடிஎம்களில் கைவரிசை.. கொள்ளையர்கள் யார்? ஆந்திராவிற்கு விரைந்தது தனிப்படை..!