வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை சேர்ந்த பழனி வயது (45). இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி வயது (38), இந்த தம்பதியினரின் இளைய மகன் திருமலை வாசன் வயது (22). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலூர் மாநகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் (சோமோட்டோ) உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் (26.01.2023) இரவு காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் செல்லும் பகுதியில் உள்ள வெல்லக்கல்மேடு பகுதியில உணவு டெலிவலிவரி செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன், தணிகாச்சலம் ஆகிய இருவர் திடீரென திருமலை வாசனின் வழியில் நிறுத்தி அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பேசிக்கொண்டு இருக்கும் போதே திருலை வாசனை சரமாரிமாக பார்த்திபன் மற்றும் தணிகாச்சலம் ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் நிலைக்குலைந்து போன திருலை வாசன் அங்கேயே மயக்கமடைந்துள்ளார்.
அங்கு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சையைல்( ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக இளைஞரை தாக்கிய பார்திபன் என்பவரை பிடித்து காட்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் திருமலை வாசனின் இருசக்கர வாகனம் மீது பார்திபன், தணிகாச்சலம் வந்த இருசக்கர வாகனம் மோதியதால் அதனை தட்டிக்கேட்டதால் இளைஞர் திருமலையை மது போதையில் இருந்த இருவர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. உணவு டெலிவரி செய்யும் இளைஞரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து காட்பாடி சட்ட ஒழுங்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் கூறுகையில், குடும்ப சூழல் காரணமாக திருமலை வாசன் கடந்த ஒரு மாதமாக உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதாகவும்.
நேற்று இரவு 2 நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளானர். ஆனால் எங்களுக்கு, திருமலை வாசனுக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக தான் தகவல் வந்தது. நாங்கள் நேரில் சென்று பார்த்த போது தான் தெரிகிறது திருமலை வாசன் பேச்சு மூச்சு இல்லாமல் உள்ளார். தயவு செய்து அவருக்கு சிகிச்சை அளிக்க அரசு முன்வந்து உதவ வேண்டும். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மது போதையில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை தாக்கிய சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு என்பதை இந்த சம்பவம் உனர்த்தியுள்ளது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.