மும்பையில் பிறந்த நாள் விருந்துக்கு அழைத்து சென்று சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆண் நண்பர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் விருந்துக்கு பரேல் பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார். வீட்டில் ஆண் நண்பரின், நண்பர்கள் 5 பேரும் இருந்தனர். அங்கு சிறுமியை கட்டாயப்படுத்தி அவரது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.


6 பேர் கைது


அவரை தொடர்ந்து மற்ற 5 பேரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் வீட்டில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் அவருடன் இருந்த 6 பேரை பிடித்தனர்.


3 சிறார்கள்


விசாரணையில் சிறுமியை ஆண் நண்பர் உள்பட 6 பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் இளைஞர்களை கைது செய்தனர். அவர்களில் 3 பேர் 18 வயத்துக்குட்பட்ட சிறார்கள் என்பதால் அவர்களை டோங்கிரியில் உள்ள காப்பகத்தில் அடைத்தனர். 


கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை அருகே வசாய் பகுதியில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆண் நண்பர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்தநிலையில் மும்பையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


போக்சோ சட்டம்


கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். 18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது.


குற்றங்கள்:


இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 


Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
Sexual Assault - பாலியல் தொல்லை
Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
Sexual Harassment - பாலியல் தொந்தரவு
Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.


18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)